close
Choose your channels

ஈபிஎஸ், அண்ணாமலை, உள்பட 21 அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து விஜய் அறிக்கை.. 

Monday, June 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய் 21 அரசியல் கட்சி தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அவர்களுக்கு தனது நன்றி என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் சமீபத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு ஏராளமான அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என கூறி விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எனது பிறந்த நாளை முன்னிட்டு தொலைபேசி வாயிலாகவும், சமூக ஊடகத் தளங்கள் வாயிலாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்த அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

குறிப்பாக புதுச்சேரி மாநில மாண்புமிகு முதலமைச்சர் திரு. என்.ரங்கசாமி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவருமான திரு. எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மதிப்பிற்குரிய திரு. ஒ. பன்னீர்செல்வம், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் மதிப்பிற்குரிய திருமதி தமிழிசை சௌந்தரராஜன்,

நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர், பாசத்திற்கும் மதிப்பிற்கும் உரிய திரு. செந்தமிழன் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திரு. தொல். திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர், அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய டாக்டர் அன்புமணி இராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் மதிப்பிற்குரிய திரு. டி.டி.வி. தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய திரு. கமல்ஹாசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் மதிப்பிற்குரிய திரு. ஜான் பாண்டியன், எஸ்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் மதிப்பிற்குரிய திரு. நெல்லை முபாரக்,

சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவருமான மதிப்பிற்குரிய திரு. கு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சித் தலைவர், மதிப்பிற்குரிய திரு. கே. அண்ணாமலை,

முன்னாள் அமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய திரு. எஸ். திருநாவுக்கரசர், முன்னாள் அமைச்சர் மதிப்பிற்குரிய திரு. டி. ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திரு. எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திரு. சி.விஜயபாஸ்கர்,

சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திருமதி வானதி சீனிவாசன், நாடாளுமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திரு. விஜய் வசந்த், சட்டமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திருமதி. தாரகை கத்பட், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், மதிப்பிற்குரிய திரு. ஒ.பி.ரவீந்திரநாத் மற்றும்

என்றும் எனது நெஞ்சிற்கினிய கலைத்துறை சார்ந்த அனைத்து ஆளுமைகள், வழிகாட்டிகள், நண்பர்கள், சகோதர சகோதரிகள், ஊடக நிறுவனங்கள், தமிழக வெற்றிக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகள், என் நெஞ்சில் குடியிருக்கும் கழகத் தோழர்கள், உலகெங்கும் உள்ள என் உயிரினும் மேலான கோடானு கோடி சொந்தங்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியினை உரித்தாக்குகின்றேன்.

 
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.