தமிழ்நாட்டில் ஏழ நகரங்களில் விஜய் டிவி நடத்தும்  நவராத்திரி கொண்டாட்டம் !!

  • IndiaGlitz, [Monday,October 16 2023]

தமிழின் முன்னணி தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தமிழகமெங்கும் ஏழு நகரங்களில் மக்களுடன் இணைந்து நவராத்திரி கொண்டாட்ட விழாவை நடத்துகிறது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், சென்னை, ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை ஆகிய ஏழு இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில் விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் இணைந்து திரு விளக்குப் பூஜை, பிரபலங்கள் கலந்து கொள்ளும் நவராத்திரி குறித்த சொற்பொழிவு அமர்வு, சூப்பர் சிங்கர்ஸ் கலந்துகொள்ளும் பக்திப்பாடல் நிகழ்ச்சி, செஃப் தாமுவின் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதம் ஆகியவை நடக்கவுள்ளது.

நவராத்திரி பெண்களுக்கு உரித்தான விழா என்பதால் ஸ்டார் விஜய் ஸ்டார்ஸ் பெண் பிரபலங்கள் அனைவரும் இதில் மக்களுடன் இணைந்து கலந்து கொண்டு நவராத்திரியைக் கொண்டாடவுள்ளனர்.

திருவிளக்கு பூஜைக்கு முன்பதிவு டோக்கன் பெற்றுக்கொண்ட பக்தர்கள் விளக்கு மற்றும் பூஜை தட்டுடன் வந்தால் மட்டும் போதும் பூஜைக்கான அனைத்து பொருட்களும் வழங்கப்படும். விஜய் டிவி ஸ்டார்ஸ் உடன் இணைந்து நவராத்திரியை வெகு சிறப்பாக கொண்டாடலாம். சூப்பர் சிங்கர் திறமையாளர்களின் பாடல்களை நேரடியாக கேட்டு மகிழலாம், அத்துடன் செஃப் தாமுவின் தயாரிப்பில் ஸ்டார் விஜய் நவராத்திரி ஸ்பெஷல் பிரசாதத்தை உண்டு மகிழலாம்.

இந்நிகழ்ச்சிகள் காஞ்சிபுரத்தில் 15 அக்டோபர் 2023 நேற்று முதலாவதாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் பாக்யலட்சுமி, ஆஹா கல்யாணம் சீரியலிலிருந்து மகா ஆகியோர் மக்களுடன் இணைந்து சிவராத்திரி பூஜையில் கலந்து கொண்டனர். விஜய் டிவி நட்சத்திரங்கள் பூஜையில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பாராட்டினர்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சென்னையில் 16 அக்டோபர் 2023, ஈரோட்டில் 17 அக்டோபர் 2023 , திருச்சியில் 18 அக்டோபர் 2023 திருநெல்வேலியில் 20 அக்டோபர் 2023 , தஞ்சாவூரில் 21 அக்டோபர் 2023 , மதுரையில் 22 அக்டோபர் 2023 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

விஜய் டிவி நவராத்திரி ஸ்பெஷலாக கொலு வைக்கும் போட்டியையும் அறிவித்துள்ளது. உங்கள் வீட்டில் வைக்கும் அழகான கொலுவின் போட்டோவை @vijaytelevision க்கு #VijayGoluContest- எனும் hashtag உடன் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்யுங்கள். போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று போட்டியாளர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்கப்படும்.

ஸ்டார் விஜய் டிவி பிரபலங்களுடன் இணைந்து கொண்டாடும் அரிய வாய்ப்பினை பெற்று, விஜய் நட்சத்திரங்களுடன் நவராத்திரியைக் கொண்டாடி மகிழுங்கள்.

விஜய் தொலக்காட்சியின் நவராத்திரி கொண்டாட்ட நிகழ்ச்சிகளை முழுவதுமாக பிரித்வி இன்னர்வியர்ஸ் நிறுவனத்தினர் வழங்குகிறார்கள்.

More News

தாயாக வேண்டும் என்ற ஆசை.. பிக்பாஸ் அக்சயா கூறிய நெகிழ்ச்சியான அனுபவம்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான அக்சயா தாயாக வேண்டும் என்ற ஆசை குறித்தும், இதுகுறித்து தான் நடித்த  அனுபவம் குறித்து விளக்கியுள்ளது உருக்கமாக இருந்தது.

ஜோவிகாவுக்கு ஆதரவாக பேசிய பவா செல்லத்துரை.. திடீரென மன்னிப்பு கேட்டதால் பரபரப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் விசித்ரா மற்றும் ஜோவிகா ஆகியோர் இடையே படிப்பு சம்பந்தமான பிரச்சினை வந்தபோது ஜோவிகாவுக்கு ஆதரவாக பவா செல்லதுரை பேசினார். அவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில்

நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 24 கேரட் தங்க ஐபோனை தொலைத்துவிட்டேன்.. கவலையில் பிரபல நடிகை..!

24 கேரட் தங்கத்தால் ஆன ஐபோனை நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொலைத்துவிட்டேன் என்றும், அதை கண்டுபிடித்து கொடுக்க ரசிகர்கள் உதவி செய்ய வேண்டும் என்றும் பிரபல நடிகை ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில்

மிருணாள் தாக்குர் செம்ம லிப்லாக்.. 'ஹாய் நான்னா' டீசர்.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

பிரபல தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் உருவான 'ஹாய் நான்னா' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியானதோடு ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

நிறைவடையும் நிலையில் 'D50' .. 'D51' படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்.!

தனுஷ் நடித்து இயக்கி வரும் 'D50' என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை எட்டி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.