close
Choose your channels

முதன்முதலாக 'தெறி' விஜய்யுடன் இணைகிறார் அதர்வா

Monday, February 22, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் நடித்து முடித்துள்ள 'தெறி' படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்து இணையதள வரலாற்றில் புதிய சாதனை நிகழ்த்திய நிலையில் தற்போது அந்த டீசர் திரையரங்குகளிலும் தெறிக்க வருகிறது.


கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள மற்றொரு திரைப்படமான அதர்வா, கேதரின் தெரசா நடித்த 'கணிதன்' திரைப்படம் வரும் 26ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் இடைவேளையின்போது 'தெறி' டீசர் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இணையத்தை கலக்கிய 'தெறி' தற்போது திரையரங்குகளையும் கலக்க காத்திருக்கின்றது. விஜய் பட டீசர், அதர்வா படத்தின் இடைவேளையில் திரையிடப்படுவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மார்ச் 5ஆம் தேதி 'தெறி' படத்தின் இசை வெளீயீட்டு விழா நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படம் வரும் ஏப்ரலில் வெளியாகவுள்ளதை அடுத்து இந்த படத்தின் உள்நாட்டு வெளிநாட்டு வியாபாரங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், ராதிகா, மகேந்திரன், மொட்டை ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். அட்லி இயக்கியுள்ள இந்த படம் விஜய்யின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment