அரசியல் வருகை குறித்து சர்வே எடுத்தாரா விஜய்? சர்வே முடிவால் அதிரடியாக எடுத்த முடிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஜய் அரசியலில் வருவது குறித்து சர்வே எடுத்ததாகவும் அந்த சர்வே முடிவால் மகிழ்ச்சி அடைந்த அவர் அதிரடியாக முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் விஜய் ’லியோ’ படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ’தளபதி 68’ படத்தை முடித்துவிட்டு முழு அளவில் அரசியலில் இறங்க போவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே அவர் மாணவ மாணவிகளுக்கு கல்வி விழா நடத்தியது, இரவு பள்ளியை தொடங்கியது மற்றும் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிப்பது போன்ற அரசியலுக்கு முன் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய் அரசியலுக்கு வந்தால் ஆதரிப்பீர்களா? என்று மக்களிடம் ஒரு சர்வே எடுக்கப்பட்டதாகவும், அந்த சர்வேயில் 70% மக்கள் விஜய்யின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.
இந்த சர்வே முடிவு விஜய் வட்டாரத்தில் புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கும் நிலையில் வரும் செப்டம்பர் மாதமே அரசியல் கட்சியை தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இருப்பினும் வரும் 2024 ஆம் ஆண்டில் நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடாது என்றும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலே விஜய் மக்கள் மன்றத்தின் இலக்கு என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout