தளபதி விஜய்யிடம் பாராட்டு பெற்ற வளரும் நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்யிடம் இருக்கும் நல்ல குணங்களில் ஒன்று திறமையான நட்சத்திரங்களை அவர் மனம் திறந்து பாராட்டுவதில் முதன்மையானவர். அந்த வகையில் சமீபத்தில் விஜய்யிடம் பாராட்டு பெற்றவர் 'மேயாத மான்', கடைக்குட்டி சிங்கம்' போன்ற படங்களில் நடித்த பிரியா பவானிசங்கர்.
இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் 'இன்று காலை எழுந்தவுடன் எனக்கு விஜய்யிடம் இருந்து ஒரு எஸ்.எம்.எஸ் வந்திருந்தது. முதலில் நான் அதை நம்பவில்லை. யாரோ என்னை ஏமாற்றுகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் அந்த எஸ்.எம்.எஸ் விஜய்யிடம் இருந்துதான் வந்துள்ளது என்பதை அறிந்தபின்னர் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அவருடைய பாராட்டுக்கு நான் தகுதியுள்ளவர் தானா என்பது எனக்கு தெரியவில்லை. ஆனாலும் நிச்சயம் நான் அவருடைய நம்பிக்கையை காப்பாற்றுவேன்' என்று கூறியுள்ளார்.
பிரியா பவானிசங்கரை விஜய் பாராட்டிய தகவல் செய்தி சேனல்கள் உள்பட அனைத்து ஊடகங்கலீலும் பரவி சமூக வலைத்தளத்தில் டிரெண்டாகி உள்ளது. ஒரு மாஸ் நடிகராக இருந்தும் வளரும் கலைஞர்களை பாராட்டி ஊக்குவிப்பதில் தளபதிக்கு நிகர் தளபதிதான் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது.
"Thank you Thalapathy @actorvijay sir for the kind words and sweet gesture?? wen I woke up to this msg this morning I genuinely tot it was a prank, had to Double check it for the Unexpected positivity u gave in this morning ??i am not sure if I deserve this much love ❤️ pic.twitter.com/nx2G3rHrOa
— Priya Bhavani Shankar (@Priyabshankar_) July 4, 2018
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments