'சர்கார்' படத்தின் அடுத்தகட்ட பணிக்கு செல்லும் தளபதி விஜய்

  • IndiaGlitz, [Saturday,July 21 2018]

தளபதி விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படத்தை வரும் தீபாவளி அன்று திரையில் வெளியிட திட்டமிட்டிருப்பதால் இந்த படத்தின் பணிகள் இரவுபகலாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக இம்மாத இறுதியில் படக்குழுவினர் அனைவரும் அமெரிக்கா செல்லவுள்ளனர். அங்கு பாடல்  மற்றும் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வரும் திங்கள் முதல் இந்த படத்தின் அடுத்தகட்ட பணியான டப்பிங் பணியை விஜய் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதன்மூலம் விஜய் சம்பந்தப்பட்ட வசனக்காட்சிகளின் படப்பிடிப்புகள் முடிவடைந்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்டோர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் இந்த ஆண்டின் அதிக எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாகும்.
 

More News

பொன்னம்பலம்-மும்தாஜ் நேருக்கு நேர் மோதல்: என்ன செய்ய போகிறார் கமல்?

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 30 நாட்களுக்கும் மேல் ஆகியும் இதன் ஸ்கிரிப்ட் ரைட்டர்களின் திறமையின்மையால் இன்னும் இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களால் ஒன்றிப்போக முடியவில்லை.

அனிருத்தின் இரண்டாவது படத்தில் நானி?

தமிழ் திரையுலகில் இளம் இசைப்புயல் அனிருத் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு அவர் தெலுங்கு திரையுலகில் Agnyaathavaasi என்ற படத்திற்கு இசையமைத்தார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாட ஆசை: உலகப்புகழ் பெற்ற பாடகி

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் ஏற்கனவே பல உலகப்புகழ் பெற்ற இசைக்கலைஞர்களுடன் பணிபுரிந்துள்ளார். அதேபோல் 'ஸ்லம்டாக் மில்லியனர்', 127 ஹவர்ஸ் உள்பட பல ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.

ஆர்யாவின் 'கஜினிகாந்த்': அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி

'ஹரஹர மகாதேவகி' மற்றும் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' ஆகிய இரண்டு அடல்ட் காமெடி படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கியிருக்கும் மூன்றாவது படம் 'கஜினிகாந்த்

ராகுல் காந்திக்கு தூது அனுப்பினாரா ரஜினிகாந்த்? பீட்டர் அல்போன்ஸ் சந்தேகம்

சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' மற்றும் 'காலா' ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குனர் பா.ரஞ்சித் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தார் என்பது தெரிந்ததே.