நிஜத்தில் முதலமைச்சராக நடிக்க மாட்டேன்: விஜய்

  • IndiaGlitz, [Wednesday,October 03 2018]

'சர்கார்' படத்தில் தான் முதலமைச்சராக நடிக்கவில்லை என்றும், ஒருவேளை தமிழகத்தின் முதலமைச்சராக ஆனால், நிஜத்தில் முதல்வராக நடிக்க மாட்டேன் என்றும் உண்மையாக இருப்பேன் என்றும் தளபதி விஜய் நேற்று ந்டந்த 'சர்கார்' இசை வெளியீட்டு விழாவில் கூறினார்.

மேலும் நான் முதலமைச்சரானால் லஞ்சம், ஊழலை ஒழிப்பேன் என்றும் ஒரு மாநிலத்திற்கு நல்ல தலைவர்கள் தேவை. மேலிருக்கும் அதிகாரிகள், அமைச்சர்கள் நல்லவர்களாக இருந்தால் மாநிலம் நல்லதாகவே இருக்கும் என்று கூறியதோடு, இதுகுறித்து பொருத்தமாக ஒரு குட்டிக்கதையும் கூறினார்.

மேலும் தேர்தலில் நின்று ஜெயித்து சர்கார் அமைப்பாங்க. நாங்க சர்கார் அமைத்து தேர்தலில் நிற்கப் போகிறோம். நான் படத்தைச் சொன்னேன். பிடித்திருந்தா படத்துக்கு ஓட்டு போடுங்க என்று கூறிய விஜய் 'சர்கார்' படம் குறித்து கூறுகையில், 'மெர்சல்' திரைப்படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது. ஆனால் சர்கார் படத்தில் அர்சியலிலேயே மெர்சல் பண்ணியிருக்கோம் என தெரிவித்துள்ளார்.

More News

'சர்கார்' விழாவில் விஜய் கூறிய குட்டிக்கதை

நேற்று நடைபெற்ற விஜய்யின் 'சர்கார்' பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் ஒரு குட்டிக்கதையை கூறி அசத்தினார்.

இந்த 'சர்கார்' அந்த சர்காரை சரிசெய்ய வேண்டும்: ராதாரவி

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள 'சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

கமல் கட்சியில் நான் இணைய ரஜினியே காரணம்: ஸ்ரீப்ரியா

நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் 'மக்கள் நீதி மய்யம்' என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்.

'பாகுபலி' வில்லனுடன் மோதிய பிரபுதேவா

பிரபுதேவா, லட்சுமி மேனன் நாயகன் நாயகியாக நடித்து வரும் 'எங் மங் சங்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மணிரத்னம் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்! காரணம் என்ன?

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'செக்க சிவந்த வானம்' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது