விஜய்சேதுபதி நினைத்தால் இந்த படத்தை தவிர்த்து இருக்கலாம்: விஜய்
- IndiaGlitz, [Sunday,March 15 2020]
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய்சேதுபதி குறித்து தளபதி விஜய் பேசியதாவது:
‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியிட்டு விழாவின் நாயகன் அனிருத்துக்கு எனது நன்றி. ஒவ்வொரு பாடலுக்கும் பின்னாடியும் ஒரு குட்டி ஸ்டோரி இருக்கும். ஆனால் அந்த குட்டி ஸ்டோரியையே ஒரு பாடலாக அமைதுதுள்ளார் என்றால் அது அனிருத் மற்றும் அருண்ராஜா காமராஜ் ஆகியோர்கள் தான். அவர்கள் இருவருக்கும் எனது நன்றி. கத்தி படத்திற்கு பிறகு அனிருத் படிப்படியாக வளர்ந்து கொண்டே இருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
ஒரு நடிகராக, ஒரு ஹீரோவாக ஜெயித்து விட்டால் அந்த இடத்தை தக்கவைத்துக் கொள்வது என்பது மிகப்பெரிய விஷயம். சின்ன சின்ன கேரக்டர் செய்து மக்கள் மனதில் இடம் பிடித்து இன்று மக்கள் செல்வனாக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள். அவர் நினைத்திருந்தால் இந்த படத்தில் நடிப்பதை தவிர்த்து இருக்கலாம். இந்த படத்தின் வில்லன் கேரக்டர் நெகட்டிவ் கொஞ்சம் ஸ்ட்ராங் தான் என்றாலும் இந்த படத்தில் நடிக்க ஏன் ஒப்புக் கொண்டார் என்பதை அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று எனக்கு ரொம்ப நாள் ஆசை. ஏனென்றால் அவருக்கு என ஒரு பிசினஸ் இருக்கும்போது அவர் ஹீரோவாகவே நடித்து கொண்டு போயிருக்கலாம். இந்த நேரத்தில் அவர் வில்லனாக நடிக்க வேண்டிய அவசியமே இல்லை. ஏன் என்று அவரிடம் நான் கேட்டேன். அவர் எதோ பெரிதாக சொல்லப் போகிறார் என்று பார்த்தால், அவர் ஒரு புன்சிரிப்புடன் என்னை காலி செய்துவிட்டார்.
மீண்டும் இந்த கேள்வியை அவரிடம் கேட்டபோது அவர் கூறியது இதுதான்: ’எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்’ என்று மட்டும் கூறிவிட்டு சென்றுவிட்டார். அப்போது தான் எனக்கு தெரிந்தது. அவர் என்னுடைய பெயரில் மட்டும் இடம்கொடுக்கவில்லை, மனதிலும் இடம் கொடுத்து விட்டார். நன்றி நண்பர் விஜய்சேதுபதி அவர்களே!