தவெக கொடியில் உள்ள நிறம், யானை, வாகை மலர் ஏன்: தவெக தலைவர் விஜய் விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று விக்கிரவாண்டியில் நடந்த நிலையில் இதில் பேசிய கட்சியின் தலைவர் விஜய், கட்சியின் கொடியில் உள்ள நிறங்கள், யானை, வாகை மலர் ஆகியவை ஏன் என்பது குறித்து விளக்கினார். அவர் இது குறித்து கூறியதாவது:
அரசியல் போருக்கு சமமானது என்று சொல்லுவாங்க, அரசியல் என்றால் அங்கு ஒரு வெற்றி கொடி பறந்தே ஆகணும். அதனாலதான் வீரத்திற்கும் வெற்றிக்கும் குறியீடா நம்ம கொடி மாறி இருக்கு.
நம்ம கட்சிக்கொடியை பற்றி யோசித்தப்ப நமக்கு என்னெல்லாம் தோணுச்சுங்கிறது உங்ககிட்ட பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நம் கட்சியில் இருக்கும் ரத்த சிவப்பு நிறம், அதாவது மெருன் கலர், பொதுவாகவே சிவப்பு நிறம் புரட்சியின் குறியீடு, அந்த கேட்டகிரியில் வரும் மெருன் கலர் எல்லாரோட கவனத்தையும் பளிச்சுன்னு ஈசியா கவரும்.
அப்புறம் நம்ம கொடியோட நடுவில் இருக்கிறது மஞ்சள் நிறம், அது மகிழ்ச்சி, நம்பிக்கை, லட்சியம், மனதில் இது உற்சாக மாற்றம், நினைவாற்றலை தூண்டுவது, இலக்கை நோக்கி உறுதியுடன் ஓட வைக்கிற ஒரு நிறம். இதையெல்லாம் மனசுல வச்சிக்கிட்டு தான் நம்ம கொடியில் இந்த கலர்களை தேர்வு செய்தோம்.
அடுத்ததாக நம் கொடியில் இருக்கும் வாகை மலர். வாகை என்பது வெற்றியின் குறியீடு. போருக்கு போயிட்டு வெற்றியோடு திரும்புறப்போ மன்னனும் அவனோட படையும் வாகை சூடி வந்தான் என்ற வர்ணனையை நாம் படித்திருப்போம். ஆனால் மன்னர் பெரும்பிடுக முத்தரையர் போருக்கு போறப்பவே வெற்றியை முன்கூட்டியே கணிச்சு வாகை மலர்களை சூடிக்கிட்டு போனாருன்னு சொல்லுவாங்க. வாகையினாலே வெற்றி என்று ஒரு அர்த்தம். அப்படியான வாகை மலரை நம்ம தமிழக வெற்றி கழக கொடியில் வைத்திருக்கிறோம்.
அப்புறம் யானை. மிகப்பெரிய பலத்தை சொல்லணும்னா யானை பலம்னு சொல்லுவாங்க. தன் நிறத்திலும், குணத்திலும், உருவத்திலும், உயரத்திலும், எப்போதுமே தனித்தன்மை கொண்டதுதான் யானை. அதுலயும் குறிப்பா போர் யானையை தன்னிகரற்றது. போர் தந்திரம் பழகிய யானை இங்கே எதிரிகளோட தடைகளையும் படைகளையும் சுத்தி வளச்சு துவம்சம் செய்வதில் கில்லாடி. தன்னோட முன்னங்கால்களை தூக்கிக்கிட்டு தும்பிக்கையை மேலே தூக்கிப் பிளறிகிட்டே ஓடிவந்து எதிரிகளை போர்க்களத்தில் பீதி அடைய வச்சு பின்னங்கால் பிடரியில் அடிக்க அலறிக்கிட்டே ஓடவைக்கும். அப்படிப்பட்ட போர்முனையில் இருக்கிற பலமான இரட்டைப்போர் யானை இங்க தான் தமிழக வெற்றிக்கழகத்தோட கொடியில் உள்ளது. இந்த ரெட்டைப் போர் யானை எவ்வளவு பெரிய மதம் பிடித்த யானைகளை கண்ட்ரோல் பண்ணி வழிக்கு கொண்டுவர வல்லமை பெற்ற கும்கி யானைக்கு இணையானது. இவ்வாறு தவெக தலைவர் விஜய் பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments