விஜய் பேசிய உருது வசனங்கள்: 'பீஸ்ட்' பட நடிகர் வெளியிட்ட தகவல்!

  • IndiaGlitz, [Wednesday,December 15 2021]

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகிய ’பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக விஜய் இன்னும் ஒரு சில நாட்களில் தனது பகுதிக்கான டப்பிங்கை பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ என்பவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் இந்த படத்தில் ஒரு சில உருது வசனங்களை பேசி உள்ளதாக தெரிவித்துள்ளார். ’பீஸ்ட்’ படத்தில் எனக்கும் அவருக்கும் நடக்கும் உரையாடலில் விஜய் சில உருது மொழி வசனங்களை பேசியுள்ளார் என்று அவர் தெரிவித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜய் ஒரு அமைதியான மனிதர் என்றும் படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் அவர் மெதுவாக தான் பேசுவார் என்றும், ரொம்ப எளிமையானவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.