மக்கள் விரோத திராவிட மாடல் ஆட்சி.. திமுகவை எதிரி என அறிவித்த விஜய்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் விரோத அரசை நடத்தி அதனை 'திராவிட மாடல்' என ஏமாற்றுகின்றனர் என தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் பேசியபோது, "பாசிச பாணியில் ஆட்சி நடத்தி வந்தபின், அதை திராவிட மாடல் என அழைப்பது ஏமாற்றம்தான். பெரியார், அண்ணா பெயரை சொல்லி, குடும்ப அதிகாரத்தை நிலை நிறுத்துகிறார்கள்" என திமுகவை கடுமையாக விஜய் தனது பேச்சில் விமர்சித்தார். மேலும் நம்முடைய கொள்கைகளுக்கு நேர்மறை எதிரிகள் அவர்களும் தான்," என்றும் குறிப்பிட்டார்.
“வீடு, உணவு, வேலை ஆகிய மூன்றுமே அடிப்படை உரிமைகள். அவற்றை மக்களுக்கு வழங்க இயலாத அரசு இருந்தால் என்ன? இல்லை என்றால் என்ன? என நான் கேள்வி கேட்க விரும்புகிறேன். நான் இங்கு இன்னொரு கூடுதல் கட்சியாக இருக்க வரவில்லை; உங்களில் ஒருவனாக உழைப்பதே எனது நோக்கம். இப்போதும் ஒரு தீர்க்கமான நோக்கத்தோடு வந்திருக்கிறேன்" என விஜய் உறுதியுடன் கூறினார்.
பிளவுவாத சித்தாந்த எதிரிகள் நம் கண்ணுக்கு தெரிவார்கள். ஊழல்வாதிகள், கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் கண்ணுக்கு தெரியாமல் வருவார்கள், மகத்தான அரசியல் என்றால், மக்களுக்கான அரசியல் தான் என்று விஜய் தெரிவித்தார்.
விஜய்யின் இந்த பேச்சில் இருந்து அவர் திமுகவை தான் டார்கெட் செய்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com