தவெக மாநாட்டில் விஜய் எத்தனை மணி நேரம் பேசுவார்.. ஆச்சரிய தகவல்..

  • IndiaGlitz, [Wednesday,October 23 2024]

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கின்ற நிலையில், இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் எத்தனை மணி நேரம் பேசுவார் என்பது குறித்த தகவல் வெளியாகி, கட்சியின் தொண்டர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில், இந்த கட்சியின் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் விறுவிறுப்பாக செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த மாநாட்டில் விஜய் இரண்டு மணி நேரம் பேச உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்டோபர் 27ஆம் தேதி மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கும் என்றும், ஆறு மணிக்கு விஜய் தனது உரையை தொடங்குவார் என்றும், அவர் எட்டு மணி வரை 2 மணி நேரம் பேசுவார் என்றும் கூறப்படுகிறது. மேலும், மாநாட்டு திடலில் நூறடி உயரத்தில் கம்பத்தில் கொடியேற்ற பின்னர் விஜய் மேடைக்கு வருவார் என்றும், அவர் மேடைக்கு வருவதற்காகவே பிரத்யேக வழி அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

முழுக்க முழுக்க தனது கட்சியின் கொள்கையை பிரகடனப்படுத்தும் வகையில் அவருடைய பேச்சு இருக்கும் என்று கூறப்படுகிறது. விஜய் கட்சி ஆரம்பித்து பல மாதங்கள் ஆனபோதும், அவரது கட்சியின் கொள்கை என்ன என்பதை விளக்கவில்லை என அரசியல் விமர்சகர்கள் விமர்சனம் செய்த நிலையில், தனது இரண்டு மணி நேர உரையில் அவர் தனது கட்சியின் முழு கொள்கைகளை விளக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.