பல மாதங்களுக்கு பின் சந்திப்பு: மகிழ்ச்சியில் தளபதி விஜய் குடும்பம்!

கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒரு சில மாதங்களாக கனடாவின் சிக்கியிருந்த விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது சென்னை திரும்பியுள்ளதால் விஜய் உள்பட விஜய் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் சினிமா தொடர்பான படிப்பை படித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதை அடுத்து சென்னை திரும்ப முடியாமல் ஜேசன் விஜய் கனடாவில் சிக்கிக்கொண்டார். இருப்பினும் அவர் கனடாவிலுள்ள விஜய்யின் உறவினர் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதாக செய்திகள் வெளிவந்தது

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் விமானங்கள் இயங்க தொடங்கியதை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஜேசன்விஜய் விமானம் மூலம் சென்னை திரும்பியதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகவும், தற்போது தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவடைந்ததும் ஜேசன் விஜய் வீடு திரும்பி இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. ஒரு சில மாதங்களுக்குப் பின்னர் மகனை மீண்டும் சந்திப்பதால் விஜய் உள்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்

இந்த நிலையில் கனடாவில் படிப்பை முடித்ததும் திரையுலகில் விஜய் மகன் சஞ்சய் குதிக்கப் போகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடிப்பாரா? அல்லது இயக்குனராக மாறுவாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது