மொட்டை ராஜேந்திரனுடன் விஜய் மகன், மகள்: வைரலாகும் 'தெறி' படப்பிடிப்பு புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய்யின் ‘தெறி’ படப்பிடிப்பு நடைபெற்றபோது அந்த படப்பிடிப்பிற்கு வந்திருந்த விஜய் மகன் சஞ்சய் மற்றும் விஜய் மகள் திவ்யா ஆகியோர் நடிகர் மொட்டை ராஜேந்திரனுடன் இணைந்து எடுத்த புகைப்படம் தற்போது திடீரென வைரலாகி வருகிறது.
விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்த திரைப்படம் ‘தெறி’. இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்திற்கு வந்த விஜய் மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யாவுடன் மொட்ட ராஜேந்திரன் புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம்தான் தற்போது திடீரென வைரலாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்யின் மகள் திவ்யா ஒரே ஒரு காட்சியில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த புகைப்படம் விஜய்யின் மகன் பெயரில் தொடங்கப்பட்ட போலி ட்விட்டர் பக்கத்தில் வைரலாகி வருவதை அடுத்து, விஜய் மகனுக்கோ மகளுக்கோ சமூக வலைதளங்களில் கணக்குகள் இல்லை என்றும் அந்தப் பக்கங்களை விஜய் ரசிகர்கள் யாரும் ஃபாலோ செய்ய வேண்டாம் என்றும் விஜய் தரப்பிலிருந்து கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
#Theri shooting spot. Good memory actually!! ??#SanjayVijay #ThalapathyVijay pic.twitter.com/5job2IiHFv
— Sanjay Vijay (@IamJasonSanjay) June 14, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments