விஜய்-எஸ்.ஜே.சூர்யா படம் குறித்த புதிய தகவல்

  • IndiaGlitz, [Wednesday,September 30 2015]

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், விஜய்யின் 59வது படமான 'விஜய் 59' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை அட்லி இயக்கி வருகிறார்.

இந்நிலையில் விஜய் நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த ஒருசில தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய் நடிக்கும் 60வது படத்தை பிரபல இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கவுள்ளதாகவும், இந்த படம் 'குஷி 2' என்றும் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படம் குஷி 2' இல்லை என்றும், முழுக்க முழுக்க இது ஒரு ஆக்ஷன் படம் என்றும் கூறப்படுகிறது.

எஸ்.ஜே.சூர்யா கூறிய ஒன்லைன் கதை விஜய்க்கு உடனே பிடித்துவிட்டதால், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணியை தொடங்கும்படி விஜய் கூறியதாகவும் கூறப்படுகிறது. விஜய்க்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகையிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.