தானாவே போதை ஏறுகிற மாதிரி ஒரு வியாதி சார்.. 'குடிமகான்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Monday,February 27 2023]

விஜய் சிவன், சாந்தினி தமிழரசன் நடித்த ’குடிமகான்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

குடிப்பழக்கம் இல்லாமலே தானாகவே போதை ஏறும் ஒருவனின் உடலில் உள்ள ரகசியம் என்ன என்பதை அறிய குடிமகன்கள் அவரை சுற்றி சுற்றி வளைப்பது தான் காமெடியாக பின்னப்பட்டுள்ள இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர்களில் ஒருவரான பிரகாஷ் என்பவரின் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் விஜய் சிவன், சாந்தினி தமிழரசன், சுரேஷ் சக்கரவர்த்தி, சேதுராமன், நமோ நாராயணன், கதிரவன், ஹானஸ்ட் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு தனுஜ் மேனன் இசையமைத்துள்ளார். தமிழ் திரையுலகில் வித்தியாசமான காமெடி கதை அம்சமுள்ள இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

உலகத்துல நடக்குற ஒவ்வொரு கொலைக்கும் ஒரு அழுத்தமான காரணம் இருக்கும்: 'கண்னை நம்பாதே' டிரைலர்..!

 உதயநிதி ஸ்டாலின் நடித்த 'கண்ணை நம்பாதே' என்ற திரைப்படம் மார்ச் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. 

பாஜகவில் கமல், ரஜினி பட நடிகைக்கு புதிய பதவி.. அண்ணாமலை வாழ்த்து..!

 சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு பாஜக மேலிடம் புதிய பதவியை அளித்துள்ளதை அடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' பட நடிகையா இவர்? செம ஸ்டைலிஷான புகைப்படம்..!

தமிழ் திரை உலகில் 'குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்' என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை தனன்யாவின் லேட்டஸ்ட் ஸ்டைலிஷான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. 

கணவர் மற்றும் மகள்களுடன் நடிகை விஜி சந்திரசேகர்.. அபூர்வ புகைப்படங்கள்..!

 நடிகை விஜி சந்திரசேகர் தனது கணவர் மற்றும் மகள்களுடன் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பாடகி ஸ்வேதா மேனனின் கணவர், குழந்தையை பார்த்திருக்கிறீர்களா? இதோ வைரல் புகைப்படங்கள்..!

தமிழ் திரை உலகின் பின்னணி பாடகிகளில் ஒருவரான ஸ்வேதா மோகனின் கணவர் மற்றும் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.