close
Choose your channels

விஜய் பாணியை வித்தியாசமாக மாற்றிய சந்தோஷ் நாராயணன்

Monday, July 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் கடந்த சில ஆண்டுகளாக தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலை பாடி வரும் நிலையில் தற்போது நடித்து வரும் 'விஜய் 60' படத்திலும் ஒரு பாடலை சந்தோஷ் நாராயணன் இசையில் பாடவுள்ளதாக வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.
இந்நிலையில் விஜய் பாடவுள்ள பாடல் கிட்டத்தட்ட தயாராகிவிட்டதாகவும், விரைவில் இந்த பாடலின் ஒலிப்பதிவு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. விஜய் இதுவரை 'கூகுள் கூகுள்', செல்பி புள்ளே உள்பட பல ரொமான்ஸ் பாடல்களை மட்டுமே பாடியுள்ளார். ஆனால் 'விஜய் 60' படத்தில் அவர் பாடும் பாடல் இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமாகவும் அதே நேரத்தில் சுவாரஸ்யமாகவும் இருக்கும் என்றும் சந்தோஷ் நாராயணன் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
சென்னையில் தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்த படத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தை 'அழகிய தமிழ்மகன்' பரதன் இயக்கி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment