'விஜய் 59' படத்திற்காக விஜய் பாடிய 'செல்லக்குட்டி' பாடல்
Send us your feedback to audioarticles@vaarta.com
அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, எமிஜாக்சன் நடித்த 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது என்பதும், இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இந்த படத்திற்காக ஒரு பாடலை இன்று விஜய் பாடியுள்ளதாகவும், அந்த பாடல் 'செல்லாக்குட்டி' என்ற ஆரம்பிக்கும் பாடல் என்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் விஜய் இரண்டு பாடல்களை பாடவுள்ளதாக ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ள நிலையில் இன்று முதல் பாடல் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரை விஜய் பாடிய பாடல்கள் அனைத்துமே ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த 'செல்லாக்குட்டியும்' கண்டிப்பாக சூப்பர் ஹிட் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் ஜனவரிக்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த பாடல் ஒரு டான்ஸ் டூயட் பாடல் என்றும் அட்லியின் அபாரமான விஷுவலில் தயாராகும் இந்த பாடலின் முதல் வரி 'செல்லாக்குட்டி' என்றும் செல்லக்குட்டி' அல்ல என்றும் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout