close
Choose your channels

விஜய்யிடம் சந்தோஷ் நாராயணன் வைத்த வேண்டுகோள்

Wednesday, July 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இளையதளபதி விஜய் கடந்த சில வருடங்களாக தான் நடித்து வரும் படங்களில் ஒரு பாடலை பாடி வரும் வழக்கத்தை கடைபிடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான 'தெறி' படத்தில் 'செல்லாக்குட்டி' என்ற பாடலை பாடினார் என்பதும் அந்த பாடல் சூப்பர் ஹிட் ஆகியது என்பதும் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் விஜய் தற்போது நடித்து வரும் 'விஜய் 60' படத்திலும் அவர் ஒரு பாடலை பாட வேண்டும் என்று இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வேண்டுகோள் விடுத்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது. இசையமைப்பாளரின் வேண்டுகோளை விஜய் ஏற்றுக்கொண்டு ஒரு பாடலை பாடுவார் என்றும் இந்த பாடல் விரைவில் ஒலிப்பதிவு செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய் 60' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வரும் செப்டம்பரிலும், பாடல்கள் நவம்பரிலும் வெளியாகும் என்று கூறப்படும் அதே நேரத்தில் இந்த படத்தை வரும் 2017ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ், ஜெகபதிபாபு, டேனியல் பாலாஜி, சுதன்ஷி பாண்டே, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை 'அழகிய தமிழ்மகன்' பரதன் இயக்கி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment