முதல்முறையாக குட்டிக்கதையை பாடலாக பாடும் விஜய்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் தான் நடித்து வரும் ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போதும் ஒரு குட்டிக்கதை கூறுவதும் அந்த குட்டி கதை ஒரு வாரத்துக்கு டிரெண்டிங்கில் இருப்பதும் தெரிந்ததே. அதே போல் விஜய் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலை பாடுவதையும் கடந்த சில ஆண்டுகளாக வழக்கமாக கொண்டுள்ளார்
இந்த நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் விஜய் ஒரு குட்டிக்கதை கூறுவார் என்று மாஸ்டர் படத்திலும் அவர் ஒரு பாடலை பாடியிருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது
இந்த நிலையில் வரும் 14-ஆம் தேதி வெளிவரவிருக்கும் மாஸ்டர் படத்தின் சிங்கிள் பாடலில் இந்த இரண்டும் நிறைவேற உள்ளது. ஆம் ’ஒரு குட்டி கதை’ என்ற பாடலை நடிகர் விஜய் பாடி உள்ளதாக சற்று முன்னர் இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்
இதுவரை இசை வெளியீட்டு விழாவில் மட்டுமே குட்டிக் கதையை கூறி வந்த விஜய் முதன்முதலாக பாடலில் கூறும் கதையை கேட்க வரும் 14-ஆம் தேதி வரை பொறுத்திருப்போம்
We’re back baby!
— Anirudh Ravichander (@anirudhofficial) February 12, 2020
Thalapathy @actorvijay sir, the Masster himself lends his voice to tell you guys a kutti kathai! ??#Master #MasterSingle #OruKuttiKathai
Feb 14tb 5 pm :) @Dir_Lokesh @Jagadishbliss @MalavikaM_ @Lalit_SevenScr pic.twitter.com/6QB3wT6NPh
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments