முதன்முதலாக விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் ஏ.ஆர்.ரஹ்மான்

  • IndiaGlitz, [Monday,March 26 2018]

தளபதி விஜய் கடந்த சில வருடங்களாகவே தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ஒரு பாடலை பாடி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவரது படத்தில் இடம்பெறும் மற்ற பாடல்களை விட விஜய் பாடும் பாடல் அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் 'மெர்சல்' படத்திற்கு பின்னர் மீண்டும் விஜய் நடிக்கும் 'தளபதி 62' படத்தில் இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்தில் விஜய்யை ஒரு பாடலை பாட வைக்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. 'மெர்சல்' படத்திலேயே விஜய் ஒரு பாடலை பாடுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் அந்த படத்தில் ரசிகர்களின் ஆசை நிறைவேறவில்லை. எனவே  'தளபதி 62;' படத்தில் விஜய் ஒரு பாடலை உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.

விஜய், கீர்த்திசுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துவரும் இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்.  க்ரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ராஜஸ்தான் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்மித் நீக்கம்; புதிய கேப்டன் யார்?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்திய விவகாரம் பூதாகரமாகியதால் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை .

பாஜகவினர் இந்த விஷயத்தில் கைதேர்ந்தவர்கள்: நடிகர் பிரகாஷ்ராஜ்

'மக்களை மத, இன ரீதியாக பிரித்தாள்வதில் கைதேர்ந்த பாஜகவினர், அந்த பழியை ஏன் அடுத்தவர்கள் மீது போடுகிறீர்கள். மக்களை மத, இன ரீதியாக பிரித்தாள்வது உங்களுக்கே கசந்துவிட்டதா?

நயன்தாரா ஒரு இரும்பு பெண்மணி: விக்னேஷ் சிவன் பெருமிதம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலித்து வருவது கோலிவுட் திரையுலகினர் அனைவருக்கும் தெரிந்ததே.

முத்து நகரா? மூச்சு திணறும் நகரா? ஸ்டெர்லைட் குறித்து பிரபல நடிகர்

ஸ்டெர்லைட் பற்றி படிக்கப் படிக்க அதிர்ச்சியாக உள்ளது. எவ்வளவு உயிர் கொல்லி நச்சுக் கழிவுகள் மண்ணிலும் நீரிலும் காற்றிலும் இதுவரை கலந்தனவோ தெரியவில்லையே?

சென்னை சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் தீவிபத்து

சென்னையில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணா சாலையில் உள்ள சிட்டி சென்டர் வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.