'சர்கார்' விழாவில் விஜய் கூறிய குட்டிக்கதை
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று நடைபெற்ற விஜய்யின் 'சர்கார்' பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் ஒரு குட்டிக்கதையை கூறி அசத்தினார்.
விஜய் தமிழகத்தின் முதல்வரானால் முதலில் என்ன செய்வார் என்று கேட்ட கேள்விக்கு பதில் கூறிய விஜய், 'இது எல்லோரும் சொல்றதுதான், லஞ்சம் ஊழலை ஒழிக்க வேண்டும். ஆனால் ஊழல், லஞ்சத்தில் நாம் ஊறிப்போனதால் இதனை 100% ஒழிக்க முடியுமா? என்று தெரியவில்லை. ஆனாலும் ஒழித்தே ஆகவேண்டும். இதற்கு ஒரு குட்டிக்கதை சொல்கிறேன்.
ஒரு மன்னன் தான் ஆட்சி செய்யும் ஊருக்கு சென்றபோது அவரை வரவேற்றவர் மக்கள் லெமன் ஜூஸ் கொடுத்தனர். அதனை வாங்கி பருகிய மன்னர் அதில் உப்பு இல்லை என்று கூறினார். உடனே அருகில் இருந்தவர் கடைக்கு சென்று கொஞ்சம் உப்பு எடுத்துவா என்று ஒருவரை அனுப்பினார்.
அப்போது மன்னன் உப்பை எடுத்து வரவேண்டாம், விலை கொடுத்து வாங்கி வா என்றும், மன்னனே உப்புக்கு காசு கொடுக்கவில்லை என்றால் அனைவரும் இலவசமாக எடுத்துவிடுவார்கள் என்றும் கூறினார்.
இந்த குட்டிக்கதையின் மூலம் பெரிய மட்டத்தில் உள்ளவர்கள் சரியாக இருந்தால் தானாகவே எல்லா மட்டத்திலும் லஞ்சம், ஊழல் ஒழிந்துவிடும் என்றும் இயற்கையின் நியதியின்படி அநியாயங்களை தட்டிக்கேட்க ஒரு தலைவன் வருவான் என்றும், தர்மம் கொஞ்சம் தாமதமாகத்தான் ஜெயிக்கும் என்றும் விஜய் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout