தளபதி 63: ரிஸ்க்கான சண்டைக்காட்சி படப்பிடிப்பில் விஜய்

  • IndiaGlitz, [Tuesday,January 29 2019]

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை அருகே உள்ள பின்னி மில்லில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட செட்டில் இந்த படத்தின் ஸ்டண்ட் காட்சிகள் நடந்து வருவதாக செய்திகள் கசிந்துள்ளது.

மேலும் ஒருசில ஸ்டண்ட் காட்சிகளில் விஜய் ரிஸ்க் எடுத்து டூப் இன்றி நடித்து வருவதாகவும், நூற்றுக்கணக்கான ஸ்டண்ட் கலைஞர்கள் இந்த சண்டைக்காட்சியில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் அடுத்தகட்ட படப்பிடிப்பில் விஜய், நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீண்ட இடைவெளிக்கு பின் விஜய், நயன்தாரா மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தில் பரியேறும் பெருமாள்' கதிர், விவேக் , யோகிபாபு , தீனா , ஆனந்த்பாபு , டேனியல் பாலாஜி உள்பட பலர் நடித்து வருகின்றனர். ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் .ரஹ்மான் இசையமைகும் இந்த படத்திற்கு விஷ்ணு ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். இந்த படம் இவ்வருட தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.