close
Choose your channels

கே.வி.ஆனந்த்-விஜய்சேதுபதி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

Monday, September 12, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி நடித்த 'தர்மதுரை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவர் நடித்த 'ஆண்டவன் கட்டளை' படத்தின் இசை வெளியீடு இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்திற்கு வந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
பிரபல இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி.ராஜேந்தர் உள்பட பலர் நடித்து வரும் இன்னும் டைட்டில் வைக்கப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்து வரும் இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. பிரபல எழுத்தாளர்கள் சுபாவின் திரைக்கதை-வசனத்தில் உருவாகி வரும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment