close
Choose your channels

'காதலும் கடந்து போகும்' படத்தின் முக்கிய, விரிவான தகவல்கள்

Wednesday, February 3, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி நடித்து முடித்துள்ள காதலும் கடந்து போகும்' திரைப்படம் வரும் 12ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் இந்த படம் குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. காதல் மற்றும் காமெடி சம அளவில் கலந்து இறுதிவரை செல்லும் ஒரு திரைப்படம்தான் இந்த படம்.

இந்த படத்தின் இயக்குனர் நலன்குமாரசாமி, தனது முந்தைய படமான 'சூதுகவ்வும்' படத்தின் சாயல் சிறிதும் இன்றி அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் உருவாக்க்கியுள்ளார். சத்யா' படத்தில் நடித்த சுந்தர் கவுன்சிலராகவும் அவருக்கு அடியாளாக விஜய்சேதுபதியும் இந்த படத்தில் நடித்துள்ளனர். சென்னையில் 250 நாட்களுக்கும் அதிகமாக ஓடி சாதனை புரிந்த 'பிரேமம்' நாயகி மடோனா செபாஸ்டியன் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி, மடோனா ஆகிய இருவருமே போட்டி போட்டு நடித்துள்ள இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக வில்லன் வேடத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார்.

நாயகன், நாயகிக்கு நட்பும் காதலும் உருவாகுவதை படிப்படியாக நகைச்சுவை கலந்த காட்சிகள் மூலம் நம்பும்படி இந்த படத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் காதல் வரும் போது படம் முடிவடைந்துவிடும் வகையில் வித்தியாசமான கதையம்சம் கொண்டது.
2 பாடல்களும், 2 சண்டைக் காட்சிகளும் இந்த படத்தில் அமைந்துள்ளது. ஒரு சண்டைக்காட்சி ஹரி - தினேஷ் ஆகியோர்களின் கைவண்ணத்தில் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டுள்ளது.

இயல்பாக வாழ்க்கையை எதிர்கொள்ளுங்கள், காதல் அது பேசாமல் வந்துவிட்டு போகட்டும் என்பதுதான் இந்த படத்தின் இயக்குனர் நலன் குமரசாமி சொல்லியிருக்கும் செய்தி என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment