விக்னேஷ் சிவன் இயக்கத்தில் த்ரிஷா-நயன்தாரா?
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த பத்து வருடங்களுக்கும் மேல் கோலிவுட் திரையுலகில் அசைக்க முடியாத இடத்தில் இருக்கும் நடிகைகள் நயன்தாரா மற்றும் த்ரிஷா. கோலிவுட்டில் பல புதுமுகங்கள் அவ்வப்போது அறிமுகமாகி வந்தபோதிலும் நயன்தாரா, த்ரிஷாவுக்கு வாய்ப்புகள் குறைவதே இல்லை.
இந்நிலையில் 'தனி ஒருவன்', 'மாயா', 'நானும் ரெளடிதான்' என மூன்று தொடர் வெற்றிகளை கொடுத்த நயன்தாராவும், சமீபத்தில் 'தூங்காவனம்' என்ற ஹிட் படத்தில் நடித்த த்ரிஷாவும் தற்போது ஒரு படத்தில் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் பல வருடங்களாக நெருங்கிய தோழிகளாக இருந்தபோதிலும் தற்போதுதான் முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நானும் ரெளடிதான்' என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில்தான் நயன்தாரா மற்றும் த்ரிஷா இணைகின்றனர். விஜய்சேதுபதி ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் ஹீரோ இரண்டு சக்தி வாய்ந்த அழகான பெண்களிடம் மாட்டிக்கொண்டு அவர்களிடம் இருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதையாம்.
சமீபத்தில் அஜீத் நடித்த 'வேதாளம்' என்ற சூப்பர் ஹிட் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments