ஒரே இரவில் முடியும் விஜய்சேதுபதியின் 'எடக்கு'

  • IndiaGlitz, [Saturday,September 23 2017]

கோலிவுட் திரையுலகில் அதிக படங்கள் நடித்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. ஏற்கனவே சமீபத்தில் 'கவண்', 'விக்ரம் வேதா', மற்றும் புரியாத புதிர் ஆகிய விஜய்சேதுபதி படங்கள் வெளியாகியுள்ள நிலை வரும் வெள்ளி அன்று 'கருப்பன்' திரைப்படமும் வெள்ளித்திரையில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் கடந்த 2012ஆம் ஆண்டு விஜய்சேதுபதி வில்லனாக நடித்து வெளியான கன்னட படம் ஒன்று தற்போது டப்பிங் செய்யப்பட்டு 'எடக்கு' என்ற பெயரில் வெளியாகவுள்ளது.

ஒரே இரவில் நடக்கும் த்ரில் படமான இந்த படத்தில் வசந்த் மற்றும் நயன்கிருஷ்ணா முக்கிய வேடங்களில் நடித்திருந்த போதிலும் விஜய்சேதுபதியின் மார்க்கெட்டை கணக்கில் கொண்டு அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு விளம்பரம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தை ஷிவன் என்பவர் இயக்கியுள்ளார்.