close
Choose your channels

ஹாட்ரிக் வெற்றி நாயகனுடன் இணையும் கே.வி.ஆனந்த்

Friday, March 11, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன் நடித்த 'காதலும் கடந்து போகும்' திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் இந்த படமும் கண்டிப்பாக வசூல் ரீதியிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த 'நானும் ரெளடிதான்' மற்றும் 'சேதுபதி' ஆகிய இரண்டு படங்களும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளதால் ஹாட்ரிக் வெற்றி கொடுத்த நாயகன் என்ற புகழை அவர் பெறுகிறார்.


இந்நிலையில் விஜய்சேதுபதியின் அடுத்த படத்தை வெற்றிப்பட இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு தனுஷ் நடித்த 'அனேகன்' படத்தை இயக்கிய கே.வி.ஆனந்த் அடுத்த படத்திற்கு தற்போது தயாராகிவிட்டதாகவும், அவருடைய அடுத்த பட நாயகன் விஜய்சேதுபதிதான் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை 'அனேகன்' படத்தை தயாரித்த ஏஜிஎஸ். நிறுவனமே தயாரிக்கவுள்ளதாகவும், வரும் ஆகஸ்ட் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment