நமக்கான சிம்மாசனத்தை நாம தான் சுமக்கணும்: பஞ்ச் டயலாக் பேசிய விஜய் சேதுபதி
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார் என்பதையும் குறிப்பாக போட்டியாளர்களிடம் அவர் இயல்பாக அதே நேரத்தில் நக்கலாகவும் கருத்தாகவும் பேசி மடக்கி வருகிறார் என்பதையும் கடந்த மூன்று வாரங்களில் பார்த்து வருகிறோம்.
அதனால் ஒவ்வொரு வாரமும் விஜய் சேதுபதியின் சனி, ஞாயிறு எபிசோடுகள் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மிகவும் இயல்பாக, செயற்கை தனம் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி நடத்தி வருவதை அடுத்து, இந்த நிகழ்ச்சி தற்போது டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணி இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சற்று முன் வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி தனது பாணியை தொடர்கிறார். இந்த ப்ரோமோவில், அவர் கையில் ஒரு சேரோடு வருகிறார்; "போட்டியாளர்கள் வீட்டில் உட்கார்ந்து பார்க்கிறாங்க. ஆடியன்ஸ்களுக்கும் சேர் இருக்குது, பார்வையாளர்கள் வீட்டில் உட்கார்ந்து பார்க்கிறார்கள், ஆனால் எனக்கு ஒரு சேர் இல்ல!" என்று கூறி, "போட்டியாளர்கள் ரொம்ப நேரம் பேசுறாங்க, ஷோல்டர் எல்லாம் வலிக்குது, இந்த சேர் நல்லா இருக்கிறதா?" என்று கூறும் அவர் ‘விஜய்சேதுபதி வித் சேர்’ என்று கூறுகிறார். மேலும் நமக்கான சிம்மாசனத்தை நம்ம தான் சுமக்கணும், வேற யாரும் செஞ்சு வைக்க மாட்டாங்க.. புரிஞ்சதா மக்களே’ என்று கூறுவதுடன் ப்ரோமோ முடிவுக்கு வருகிறது.
மொத்தத்தில் இன்று ஒரு முடிவோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி வந்திருக்கிறார் என்பதையும் இதுவரை வெளியான இரண்டு ப்ரோமோக்களிலிருந்து தெரிகிறது. இதனால் இன்றைய எபிசோடிற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
#Day20 #Promo2 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 26, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/FuR5wbdPkI
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout