நமக்கான சிம்மாசனத்தை நாம தான் சுமக்கணும்: பஞ்ச் டயலாக் பேசிய விஜய் சேதுபதி

  • IndiaGlitz, [Saturday,October 26 2024]

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார் என்பதையும் குறிப்பாக போட்டியாளர்களிடம் அவர் இயல்பாக அதே நேரத்தில் நக்கலாகவும் கருத்தாகவும் பேசி மடக்கி வருகிறார் என்பதையும் கடந்த மூன்று வாரங்களில் பார்த்து வருகிறோம்.

அதனால் ஒவ்வொரு வாரமும் விஜய் சேதுபதியின் சனி, ஞாயிறு எபிசோடுகள் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மிகவும் இயல்பாக, செயற்கை தனம் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி நடத்தி வருவதை அடுத்து, இந்த நிகழ்ச்சி தற்போது டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணி இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சற்று முன் வெளியான இரண்டாவது ப்ரோமோவில் விஜய் சேதுபதி தனது பாணியை தொடர்கிறார். இந்த ப்ரோமோவில், அவர் கையில் ஒரு சேரோடு வருகிறார்; போட்டியாளர்கள் வீட்டில் உட்கார்ந்து பார்க்கிறாங்க. ஆடியன்ஸ்களுக்கும் சேர் இருக்குது, பார்வையாளர்கள் வீட்டில் உட்கார்ந்து பார்க்கிறார்கள், ஆனால் எனக்கு ஒரு சேர் இல்ல! என்று கூறி, போட்டியாளர்கள் ரொம்ப நேரம் பேசுறாங்க, ஷோல்டர் எல்லாம் வலிக்குது, இந்த சேர் நல்லா இருக்கிறதா? என்று கூறும் அவர் ‘விஜய்சேதுபதி வித் சேர்’ என்று கூறுகிறார். மேலும் நமக்கான சிம்மாசனத்தை நம்ம தான் சுமக்கணும், வேற யாரும் செஞ்சு வைக்க மாட்டாங்க.. புரிஞ்சதா மக்களே’ என்று கூறுவதுடன் ப்ரோமோ முடிவுக்கு வருகிறது.

மொத்தத்தில் இன்று ஒரு முடிவோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி வந்திருக்கிறார் என்பதையும் இதுவரை வெளியான இரண்டு ப்ரோமோக்களிலிருந்து தெரிகிறது. இதனால் இன்றைய எபிசோடிற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

More News

ஆவலுடன் எதிர்பார்த்த 'ஸ்பைடர்மேன் 4'.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாலண்ட் நடிக்கும் 'ஸ்பைடர் மேன் 4' 2026 ஆம் ஆண்டு ஜூலை 24, அன்று திரையரங்குகளில் வெளி வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 அனுபவிக்கணும் ஆராயக்கூடாது.. இரட்டை அர்த்தம் பாடல் என்ற விமர்சனத்திற்கு இயக்குனர் விளக்கம்..!

சக்தி சிதம்பரம் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் உருவான "ஜாலியோ ஜிம்கானா" என்ற திரைப்படத்தின் பாடல் நேற்று வெளியான நிலையில், இந்த பாடல் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

3 தலைமுறை வாரிசுகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய ராதிகா அம்மா.. க்யூட் புகைப்படம்..!

நடிகை ராதிகாவின் அம்மா இன்று தனது பிறந்த நாளை தனது மூன்று தலைமுறை வாரிசுகளுடன் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கையில் கோப்பை..  கிளாமர் காஸ்ட்யூம்.. அமலாபால் பிறந்த நாள் புகைப்படங்கள்..!

நடிகை அமலாபால் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கவனிக்க வேண்டியது விளையாட்டை அல்ல.. விளையாடுபவர்களின் யுக்தியை: விஜய் சேதுபதி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 19 நாட்கள் முடிவடைந்து, இன்று 20வட்ஜி நாள் எபிசோடு ஒளிபரப்பாக இருக்கிறது. இன்றைய எபிசோடின்