ரஜினியுடன் அதிகாரபூர்வமாக இணைந்த விஜய்சேதுபதி
- IndiaGlitz, [Thursday,April 26 2018]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'காலா' திரைப்படம் வரும் ஜூன் மாதமும், '2.0' ஆகிய திரைப்படம் வெகுவிரைவிலும் வெளியாகவுள்ள நிலையில் ரஜினிகாந்த் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.
சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த பிரமாண்டமான படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குறிப்பாக இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை உள்பட மற்ற நடிகர், நடிகையர் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா, ஜிகர்தண்டா மற்றும் இறைவி ஆகிய மூன்று படங்களிலும் நடித்த மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, இந்த படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார். ரஜினியுடன் முதல்முறையாக விஜய்சேதுபதி இணைந்துள்ளது இந்த படத்தின் எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளதாக வதந்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு என்ன கேரக்டர் என்பதை படக்குழுவினர் தெரிவிக்கும் வரை பொறுமை காப்போம்