ரஜினி படத்தை இரண்டு முறை மிஸ் செய்த விஜய்சேதுபதி
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. ஆனால் அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஏற்கனவே இரண்டு முறை ரஜினி படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், ஆனால் அது மிஸ் ஆகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய 'லிங்கா' படத்தில் வில்லன் கேரக்டரில் தன்னை நடிக்க வைக்க இயக்குனர் முடிவு செய்திருந்ததாகவும், ஆனால் அப்போது தான் மொபைல் எண்ணை மாற்றியிருந்ததால் அவரால் தன்னை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று கூறினார்.
அதேபோல் 'கபாலி' படத்திற்காக இயக்குனர் ரஞ்சித் ஆறு நாட்கள் கால்ஷீட் கேட்டதாகவும், அந்த சமயத்தில் தன்னால் கால்ஷீட் தரமுடியாத நிலை இருந்ததால் அந்த படத்தையும் மிஸ் செய்ததாக கூறியுள்ளார். மேலும் நமக்கு வரும் வாய்ப்புகள் மிஸ் ஆகின்றது என்றால் அதைவிட பெரிய வாய்ப்பு வரப்போகின்றது என்று அர்த்தம் என்றும் விஜய்சேதுபதி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments