ஓட்டு போடுவதற்கு காசு வாங்குவதை விட இதுதான் பச்சை துரோகம்: விஜய்சேதுபதியின் விழிப்புணர்வு வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் விஜய் சேதுபதி சற்றுமுன் வெளியிட்டுள்ள வீடியோவில் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பது குறித்து கூறியுள்ளார். இந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே.. அனைவருக்கும் வணக்கம்! நாம் எல்லோரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருந்த தேர்தல் வந்துவிட்டது. தேர்தல் நேரத்தில் நாம் எல்லோரும் சொல்வது என்னவென்றால், யார் வந்தால் நமக்கென்ன, யார் காசு கொடுக்கிறார்களோ அவர்கள் ஓட்டு போடுவோம் அல்லது நம்முடைய ஒரு ஓட்டு போட்டு ஒன்றும் ஆகப் போவதில்லை என்று தான் கூறுவோம்
ஆனால் அதையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விடுங்கள். நாம் நமக்காக இல்லை என்றாலும் நம்முடைய குழந்தைகளின் எதிர்காலத்திற்காக, அடுத்த தலைமுறையினர் நன்மைக்காக நிச்சயம் ஓட்டு போட வேண்டும். காசு வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது, காசு வாங்கிக் கொண்டு ஓட்டை விற்பது, இதைவிட மிகவும் பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது.
உங்களுக்கு பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் யார், என்ன என்று தெரிந்து வைத்து கொள்ளுங்கள். அவர்களால் நமக்கு என்ன பயன்? அவர்களால் இந்த நாட்டிற்கு என்ன பயன்? என்பதை சிந்தித்து வாக்களிக்க வேண்டும். நாம் எல்லாரும் சேர்ந்தது தானே நாடு, நாம் என்பது இன்றைக்கு மட்டும் பார்க்க வேண்டியதில்லை, நம்முடைய எதிர்காலம், நம்முடைய குழந்தைகளின் எதிர்காலம் ஆகியவற்றை பார்த்து ஓட்டு போட வேண்டும்
நம்மை ஆளப்போவது யாரு? நாம் யார் கையில் ஆட்சியை கொடுக்க போகிறோம்? அவர்களுக்கு ஆட்சி நடத்த என்ன தகுதி இருக்கிறது? இதற்கு முன் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? அவர்கள் என்னென்ன வாக்குறுதி கொடுக்கிறார்கள்? என்பதை தயவு செய்து அலசி ஆராய்ந்து ஓட்டு போட வேண்டும்
இதுவரை நீங்கள் அரசியல் பேசாமல் இருந்திருந்தால் பரவாயில்லை, ஆனால் இன்று முதல் ஓட்டு போடும் நாள் வரைக்கும் அரசியல் பேசுங்கள், அரசியல் பற்றிய விவாதத்தை வைத்துக் கொள்ளுங்கள், ஓட்டு போடும் தினத்தன்று தெளிவாக சிந்தித்து உங்களுக்கு யார் சரி என்று படுகிறதோ, அவர்களுக்கு ஓட்டு போடுங்கள்’ என்று விஜய் சேதுபதி கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
நம்முடைய வாக்கு இந்த நாட்டை மாற்றும் என்றால் நம் நிலையையும் மாற்றும் சிந்தித்து வாக்களியுங்கள் - வாக்களிக்க வலியுறுத்தி நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட வீடியோ..#Actor | #VijaySethupathi | #Vote | #Election | #ElectionCampaign | #ParliamentElection2024 | #Election2024 |… pic.twitter.com/aLgGqNp7jC
— Polimer News (@polimernews) April 3, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments