பேரறிவாளன் விடுதலை: விஜய்சேதுபதி வெளியிட்ட வீடியோ!

  • IndiaGlitz, [Friday,November 20 2020]

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், பார்த்திபன் ஆகியோர் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததை குறித்து ஏற்கனவே பார்த்தோம்

அது மட்டுமின்றி நடிகர், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி உள்பட பல திரையுலக பிரமுகர்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் இது குறித்து பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது:

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து தமிழக கவர்னர் அவர்கள் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அற்புதம்மாளின் 29 வருட போராட்டம், ஒரு குற்றமற்றவருக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். தயவுசெய்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து பேரறிவாளனை சீக்கிரமாக விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், நன்றி’ என கூறியுள்ளார்.