விஜய் சேதுபதியால் இந்திய லெவலில் அளவில் பேசப்படும் வெற்றிமாறனின் 'விடுதலை'
- IndiaGlitz, [Tuesday,April 27 2021]
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அகில இந்திய நடிகராக மாறிவிட்டார் என்பது தெரிந்ததே. சமீபத்தில் தெலுங்கில் வெளியான ’உப்பென்னா’ என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு தெலுங்கு திரையுலக பிரமுகர்களால் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தற்போது அவர் ’மும்பைகார்’ உள்பட ஒருசில இந்தித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பதால் தற்போது அவர் தேசிய நடிகராக மாறிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகின் மாஸ் நடிகர்கள் தமிழில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நிலையில் விஜய் சேதுபதி அனைத்து மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார் என்பதும் இமேஜ் பார்க்காமல் வில்லன் உள்பட எந்த கேரக்டர் என்றாலும் ஒப்புக் கொண்டு தனது திறமையை நிரூபித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான ’மாஸ்டர்’ திரைப்படம் கூட விஜய் படமா? விஜய் சேதுபதி படமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவிற்கு விஜய் சேதுபதியின் டாமினேஷன் அந்த படத்தில் இருந்தது.
இந்த நிலையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் ’விடுதலை’ என்ற படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். விஜய் சேதுபதி ஏற்கனவே டோலிவுட், பாலிவுட்டில் பிரபலம் என்பதாலும், இயக்குனர் வெற்றிமாறன் ’அசுரன்’ படத்திற்காக தேசிய விருது பெற்றதால் இந்திய அளவில் வெற்றி பிரபலமாகியதாலும் ’விடுதலை’ படத்தை தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
அகில இந்திய அளவில் ’விடுதலை’ படம் வெளியிட தகுதியுள்ள படம் என்பதால் இந்த படம் இந்தி உள்பட பல மொழிகளில் வெளியிடவுள்ளதை அடுத்து இந்த படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.