பிளாஸ்மா தானம் குறித்து விஜய்சேதுபதி கூறிய முக்கிய தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு லட்சத்தை நெருங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
ஒரு பக்கம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் இன்னொரு பக்கம் கொரோனா வைரஸிடமிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் அனைத்து மாநில சுகாதார துறையும் கொரோனாவில் இருந்து குணமான அனைவரும் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டும் என்றும் அதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்றும் கேட்டுக் கொண்டு வருகின்றனர்
அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதி இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனாவிடம் இருந்து குணமடைந்த அனைவரும் பிளாஸ்மா தானம் செய்ய முன்வரவேண்டும் என்றும் இதனால் கொரோனா வைரஸ் எளிதில் கட்டுப்படுத்தலாம் என்றும், கொரோனாவிடம் இருந்து மக்களை காப்பாற்ற போராடி வரும் டாக்டர்களுக்கு பிளாஸ்மா தானம் பெரிதும் உதவிகரமாக இருக்கும் அவர் கூறியுள்ளார். விஜய்சேதுபதியின் இந்த பதிவிற்கு உடனடியாக ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Happy to announce plasma donation program initiated by @drhakkim and Uyir Thuli Trichy. Kindness & empathy is the major need of the hour, if you are a #coronasurvivor please help the doctors fight corona by donating plasma. Be a reason a family survives #donateplasma pic.twitter.com/rJNb9qsGcl
— VijaySethupathi (@VijaySethuOffl) July 14, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com