3 மாதங்களில் 5 படங்களை ரிலீஸ் செய்கிறாரா விஜய் சேதுபதி?

  • IndiaGlitz, [Monday,September 14 2015]

பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும், போன்ற வெற்றி படங்களால் முன்னணி நடிகர்களில் ஒருவராக இணைந்து கொண்ட விஜய் சேதுபதி சமீபத்தில் வெளியான ஆரஞ்சு மிட்டாய்' உள்பட எந்த படமும் அவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில் இவ்வருடத்தில் விஜய் சேதுபதி நடித்த ஐந்து படங்கள் ரிலீசாகவுள்ளதாகவும், ஐந்து படங்களுமே மிகவும் எதிர்பார்ப்பிற்குரிய படங்கள் என்பதால் இவ்வருட இறுதியில் மீண்டும் வெற்றி நாயகனாக விஜய்சேதுபதில் வலம் வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் தயாரிப்பில் நயன்தாராவுடன் விஜய்சேதுபதி நடித்துள்ள 'நானும் ரெளடிதான்' திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. அக்டோபர் 1ஆம் தேதி விஜய்யின் 'புலி' ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்த நாளே இந்த படமும் வெளியாவது இந்த படத்தின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுவதாக கூறப்படுகிறது.

சீனுராமசாமி இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்த 'இடம் பொருள் ஏவல்' திரைப்படம் அக்டோபர் இறுதியில் வெளியாகிறது. தேசிய விருது பெற்ற இயக்குனர் என்பதால் இந்த படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்சேதுபதி நடித்த மற்றொரு படமான 'மெல்லிசை' நவம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

'சூதுகவ்வும்' வெற்றி படத்தை இயக்கிய நலன்குமாரசாமியின் இயக்கத்தில் இன்னும் பெயர் வைக்கப்படாத ஒரு படத்தில் விஜய்சேதுபதி நடித்து வரும் திரைப்படம் டிசம்பரிலும், இதே மாதத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'இறவி' திரைப்படமும் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. மேற்கண்ட ஐந்து படங்களுமே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் விஜய்சேதுபதிக்கு இவ்வருடம் ஒரு திருப்புமுனை ஆண்டாக இருக்கும் என கோலிவுட்டில் கூறப்படுகிறது.

More News

வடிவேலு, வினுசக்கரவர்த்தியுடன் பாண்டவர் அணி சந்திப்பு

நடிகர் சங்க தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் பாண்டவர் அணியினர் நேற்று நடிகர் சூர்யாவை சந்தித்து ஆதரவு திரட்டியதை பார்த்தோம்...

அஜீத் சந்திப்பை மறைத்தது ஏன்? சிவகார்த்திகேயன் விளக்கம்

கோலிவுட்டில் வெற்றி மேல் வெற்றி குவித்து வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய சிவகார்த்திகேயன், சமீபத்தில் அஜீத்தை...

'தல 56' படத்தில் இணையும் 'புலி' நடிகை

'வீரம்' சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கும் நிலையில் விஜய்யின் 'புலி'...

உலக நாயகனை ஒரே ஒரு நாளில் முந்திய தல அஜீத்?

வரும் தீபாவளி தினத்தில் அஜீத்தின் ''தல 56'' மற்றும் கமல்ஹாசனின் ''தூங்காவனம்'' ஆகிய இரு படங்களும் ரிலீஸ் ஆவது கிட்டத்தட்ட ...

ரஜினி, கமல், விஜய்யை அடுத்து சூர்யாவை சந்தித்த பாண்டவர் அணி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் அக்டோபர் 18 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதை...