போயி வேற வேலை இருந்தா பாருங்கடா...: விஜய் வீட்டின் ரெய்டு குறித்து விஜய்சேதுபதி டுவீட்

  • IndiaGlitz, [Wednesday,February 12 2020]

நடிகர் விஜய், பிகில் பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செல்வன் ஆகியோர்கள் இல்லங்களில் திடீரென வருமான வரித்துறை சமீபத்தில் அதிரடி ரெய்டு செய்தது என்பது தெரிந்ததே.

இந்த ரெய்டு குறித்து பல்வேறு வகையான செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகிறது என்பதும் அவற்றில் பெரும்பாலானவை கற்பனைகள் கலந்த வதந்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆங்கில ஊடகம் ஒன்றில் இந்த ரெய்டு குறித்து வெளியான செய்தியில், ‘விஜய் உள்பட திரை உலகில் உள்ள பல பிரபலங்கள் கிறிஸ்துவ மத மாற்றத்திற்கு கருப்பு பணத்தை உபயோகிப்பதாகவும், பிகில் பணத்தில் கிடைத்த லாபத்தை கிறிஸ்துவ மதமாற்ற வேலைக்காக பயன்படுத்தியதாகவும், இதில் விஜய், விஜய்சேதுபதி உள்பட முன்னணி நடிகர்கள் உடந்தை என்றும், இதனை கடந்த சில மாதங்களாக உற்று நோக்கி வந்த வருமான வரித்துறை தகுந்த ஆதாரங்களுடன் தற்போது ரெய்டு செய்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த செய்தி குறித்து நடிகர் விஜய்சேதுபதி தனது சமூக வலைதளப் பக்கத்தில் போயி வேற வேலை இருந்தா பாருங்கடா... என்று கடுப்புடன் பதிவு செய்துள்ளார் இந்த பதிவிற்கு அவரது ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசு முறை பயணமாக இந்தியா வருகை

உலகில் மிகப் பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் அரசு முறை பயணமாக பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார்.

தயாரிப்பாளர் சங்க தேர்தல்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்தஆண்டு ஏப்ரல் 30-ம் தேதியுடன் முடிவடைந்ததால் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மாவட்டப் பதிவாளரான என்.சேகர்

மின் கோபுரங்கள் விவசாயிகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்துமா??? தமிழகத்தில் தொடரும் எதிர்ப்புகள் ஏன்???

தமிழகத்தில் உயர் மின் கோபுரங்களை அமைக்கும் திட்டத்திற்கு விவசாயிகள் தொடர்ந்து கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர்

நித்யானந்தாவுடன் கனெக்சன் ஆகும் பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சாமியார் நித்யானந்தா சமீபத்தில் தலைமறைவாகியுள்ளார் என்பதும் அவரை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளது என்பதும் தெரிந்ததே 

இனி கொரோனா வைரஸ் -  COVID-19 என அழைக்கப்படும் – உலகச் சுகாதார நிறுவனம் அறிவிப்பு

சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா நாவல் வைரஸ் (Novel corona - nCov) என்றே இதுவரை சொல்லப் பட்டு வந்தது