'ஜெஸ்ஸி' த்ரிஷாவை பார்த்து மயங்கியவர்களில் நானும் ஒருவன்: '96' படவிழாவில் விஜயசேதுபதி
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் சேதுபதி, த்ரிஷா முதன்முதலாக இணைந்து நடிக்கும் '96' படத்தின் பூஜை இன்று சென்னையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளர் பிரேம் இயக்கும் இந்த படம் 96ஆம் ஆண்டின் இளம் காதலர்களின் கதை
இந்த படம் குறித்து விஜய்சேதுபதி கூறியபோது, இந்த படத்தின் கதை ஒரு இளம் வயது காதல் கதையென்றும், ஒரு மெச்சூர்டன காதல் கதை என்றும், எல்லோரும் வாழ்க்கையில் ஏங்கும் ஒரு காதல் கதை என்றும் கூறலாம். இந்த படத்தை பார்க்கும் எல்லோரையும் டைம் மிஷின் போல 96ஆம் ஆண்டிற்கு அழைத்து செல்லும் என்று நான் நம்புகிறேன். 'விண்ணை தாண்டி வருவாயா' படத்தை பார்த்து எல்லோரையும் போல நானும் மயங்கியிருக்கின்றேன். அந்த ஜெஸ்ஸியோடு சேர்ந்து பணிபுரிவதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்' என்று கூறினார்.
மெட்ராஸ் என்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அந்தமான், கொல்கத்தா, ராஜஸ்தான், பாண்டிச்சேரி, கும்பகோணம் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெறவுள்ளது. இந்த படத்தில் காளி வெங்கட் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், மற்ற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments