தனக்கு தேவையான பதிலை போட்டியாளர் வாயில் இருந்து வர முயற்சி செய்கிற விஜய் சேதுபதி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விஜய் சேதுபதி பல நேரங்களில் ஒரு சார்பாக முடிவெடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு கடந்த சில வாரங்களாக இருந்து வருகிறது. நேற்றைய நிகழ்ச்சிகளிலும் இந்த குற்றச்சாட்டு மீண்டும் உறுதி செய்யப்பட்டதாக நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருபவர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
அருண் தன்னை கையெடுத்து கும்பிட்டது, தன்னை கேலி செய்வது போல் உள்ளது என்று மஞ்சரி குற்றம் சாட்டிய நிலையில், “அப்போது நீங்கள் சிவாவை பார்த்து கும்பிட்டதும் அதே மாதிரி தானே?” என்ற கேள்வியை விஜய் சேதுபதி எழுப்பினார். இதற்கு மஞ்சரியிடம், "நீங்கள் செய்ததும் தப்பு தானே?" என்று திரும்பத் திரும்ப கேள்வி கேட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
மஞ்சரி, “அருண் செய்தது தப்பு என்றால் நான் செய்ததும் தப்பு,” என்று கூறியபோதும், விஜய் சேதுபதி விடாமல், “அருள் செய்தது தப்பில்லை என்றால்?” என்று கேள்வியை தொடர்ந்து வலியுறுத்தினார். அப்போதும் மஞ்சரி, “அருண் செய்தது தப்புதான், நான் செய்ததும் தப்புதான்,” என்று கூறிய நிலையில், விஜய் சேதுபதி, “அப்படி என்றால் நீங்கள் செய்தது தப்பே என்பதை உணர்ந்து கொண்டிருக்கிறீர்கள்,” என்று கூறி அவரை உட்கார வைத்தார்.
விஜய் சேதுபதி திரும்ப திரும்ப கேள்வி கேட்ட போதும், கடைசி வரை மற்ற போட்டியாளர்கள் போல் இல்லாமல், தான் எடுத்த நிலையில் கடைசி வரை நின்று மஞ்சரி செய்த செயல் பாராட்டப்பட்டு வருகிறது.
மஞ்சரியை தப்பு செய்தவர் என்று நிரூபிக்க விஜய் சேதுபதி தீவிரமாக முயற்சி செய்தது, அவருடைய நடுநிலைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கி உள்ளது. மேலும், விஜய் டிவியின் ப்ராடக்ட் ஆன அருண் செய்ததும் தப்புதான் என்ற வார்த்தையை சொல்ல தவிர்த்ததும், அவரின் சார்புநிலை வெளிப்படுவதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதே போன்று நிகழ்ச்சியை விஜய் சேதுபதி நடத்தினால், அவர் அடுத்த சீசனுக்கு கண்டிப்பாக தொகுப்பாளராக இருக்க மாட்டார் என்று நெட்டிசன்கள் கூறி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ennayaa #Vjs Ivaruku thevaiyana Answer ah vaangitu irukaru 🙄
— 》Ⱥքքմ《 (@itsappu_) November 30, 2024
Atha soldra varaikum vidama thirupi thirupi #Manjari ah kettute irukaru.
contestant Dead Silent 😶 pachaya theriyuthu.#BiggBossTamil8 #BiggBossSeason8Tamil #BiggBoss8Tamil #BiggBossTamil pic.twitter.com/gbigyq6BkE
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout