விஜய்சேதுபதி படத்தில் 3 முறை ஆஸ்கார் விருது வென்ற கலைஞர்
Send us your feedback to audioarticles@vaarta.com
'நடுவில கொஞ்சம் பக்கத்தை காணோம்' படத்தை அடுத்து பாலாஜி தரணீதரன் இயக்கிய 'ஒருபக்க கதை' சமீபத்தில் சென்சார் சான்றிதழ் பெற்றது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் அவர் இயக்கி வரும் மற்றொரு படமான விஜய்சேதுபதியின் 'சீதக்காதி' படத்தில் மூன்று முறை ஆஸ்கார் விருது வென்ற கலைஞர் இணைந்துள்ளார்
இந்த படத்தில் விஜய்சேதுபதி, 30, 50, 75 வயதுகளில் மூன்று கெட்டப்புகளில் தோன்றுகிறார். இதில் 75 வயது கேரக்டருக்கு ஹாலிவுட்டின் புகழ்பெற்ற மேக்கப்பேன் கிரேக் கேனான் என்பவர் மேக்கப் செய்யவுள்ளார். இவர் ஏற்கனவே Mrs. Doubtfire, The Curious Case of Benjamin Button மற்றும் Dracula ஆகிய படங்களுக்கு பணிபுரிந்து ஆஸ்கார் விருதினை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் புகழ் ஓவியாவும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது அனைவரும் அறிந்ததே. ஓவியாவுடன் பார்வதி, ரம்யா நம்பீசன், காயத்ரி ஆகிய நாயகிகளும் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com