விஜய்சேதுபதியை முந்திய சசிகுமார்-ராஜ்கிரண் கூட்டணி!

  • IndiaGlitz, [Wednesday,February 27 2019]

சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' மற்றும் 'சீமராஜா' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் அடுத்ததாக விஜய்சேதுபதி நடிக்கும் படம் ஒன்றை இயக்க ஒப்பந்தமானார்.

இந்த நிலையில் விஜய்சேதுபதிபதியின் மற்ற படங்கள் முடிந்து பொன்ராம் இயக்கும் படம் அடுத்த வருடம் தான் தொடங்கும் என்று கூறப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தை வீணாக்க விரும்பாத பொன்ராம், ஒரு குறுகிய கால திரைப்படம் ஒன்றை இயக்க முடிவு செய்தார். அந்த படத்தில் தான் சசிகுமார் மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர்.

பொன்ராம் இயக்கிய மற்ற படங்கள் போலவே இந்த படமும் கிராமத்து கதையம்சம் கொண்ட படம் என்றும், சசிகுமார் மற்றும் ராஜ்கிரண் ஆகிய இருவரும் கிராமத்து கேரக்டர்களுக்கு பொருத்தமாக இருந்ததால் அவர்களை தேர்வு செய்துள்ளதாகவும் பொன்ராம் கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாகவும் இந்த படத்தை முடித்த பின்னர் பொன்ராம், விஜய்சேதுபதி படத்தை இயக்குவார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 

More News

அதிமுகவுடன் கூட்டணி எதிரொலி: பாமகவில் இருந்து பிரபல நடிகர் விலகல்!

அதிமுகவை கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக விமர்சனம் செய்த பாமக, திடீரென 7 மக்களவை தொகுதிக்காகவும், ஒரு மாநிலங்களவை தொகுதிக்காகவும்

புல்வாமா மட்டுமின்றி காந்தகாருக்கும் சேர்த்து பழிதீர்த்த இந்தியா!

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இன்று அதிகாலை இந்திய விமானப்படை, பாகிஸ்தானுக்குள் நுழைந்து தீவிரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கியதோடு

அருண்விஜய்யின் 'தடம்' படத்தின் கச்சிதமான ரன்னிங் டைம்!

அருண்விஜய் நடிப்பில் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கிய 'தடம்' திரைப்படம் வரும் மார்ச் 1ஆம் தேதி வெளியாகவுள்ளது.

முதலமைச்சர் கோப்பையை கைப்பற்றிய சுசீந்திரன் பட நடிகைகள்

பிரபல இயக்குனர் சுசீந்திரன் தற்போது 'கென்னடி கிளப்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது

சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2: மொத்த ஸ்வீட்டையும் தானம் வழங்கிய கடை ஓனர்

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என ஒட்டுமொத்த இந்தியாவே குரல் கொடுத்த நிலையில் நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இன்று அதிகாலை பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை