இயக்குனர் ஜனநாதனின் மருத்துவ பில் முழுவதையும் கட்டிய நடிகர்!

பிரபல இயக்குனர் ஜனநாதன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி நேற்று காலை அவர் காலமானார். இதனை அடுத்து நேற்று மாலை அவருடைய இறுதிச்சடங்கு நடைபெற்றது என்பதும் இதில் திரையுலகினர் பலர் கலந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் வந்த தகவலின் அடிப்படையில் ஜனநாதனின் மருத்துவச் செலவு முழுவதையும் நடிகர் விஜய்சேதுபதி ஏற்றுக் கொண்டதாகவும் மருத்துவமனையில் நேற்று அவர் தனது சொந்த பணத்தில் மருத்துவமனையின் பில்லை செட்டில் செய்ததாகவும் தகவல்கள் வெளிவந்திருக்கின்றன.

ஏற்கனவே ஜனநாதனின் மருத்துவ செலவை தான் ஏற்றுக்கொள்வதாக விஜய் சேதுபதி அவரது குடும்பத்தினரிடம் வாக்கு கொடுத்து இருந்தார் என்பதும் அதன் அடிப்படையில் நேற்று மருத்துவ பில்லை செட்டில் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாதன் இயக்கத்தில் ’புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பதும் தற்போது அவர் இயக்கி முடித்துள்ள ’லாபம்’ திரைப்படத்திலும் விஜய்சேதுபதி தான் நாயகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஜூலையில் ஒரு நல்ல சேதி: ஹர்பஜன்சிங் மனைவியின் இன்ஸ்டா போஸ்ட்!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய பந்துவீச்சாளர்கள் ஒருவராகிய ஹர்பஜன் சிங்கின் மனைவி கீதா பஸ்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வரும் ஜூலை மாதம் ஒரு நல்ல செய்தி வர இருக்கிறது

'வலிமை' அப்டேட் தந்த வானதி ஸ்ரீனிவாசன்: டுவிட் வைரல்!

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பட்டியலில் கோவை தெற்கு தொகுதியில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிடப்

பயங்கர ஷாக்கான விஷயம்: ஜெயம் ரவியின் பேட்டி!

இயக்குனர் ஜனநாதன்  அவர்கள் நேற்று காலமான நிலையில் அவரது இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது. அதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

சன் மியூசிக் தொகுப்பாளினிக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரல் புகைப்படம்!

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக இருந்த ஒருவரின் மகனுக்கு 10வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டதை அடுத்து, அவருக்கு இவ்வளவு பெரிய மகனா? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விஜயகாந்த் தொகுதியில் பிரேமலதா!

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக, அமமுக கூட்டணியில் இணைந்தது என்றும் அந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.