இது காலங்காலமாக நடக்கும் பிரச்சனை: '96' பிரச்சனை குறித்து விஜய்சேதுபதி
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான விஜய்சேதுபதியின் '96' திரைப்படம் ஒருசில பைனான்ஸ் பிரச்சனையால் அதிகாலை காட்சி ரத்தானது. அதன்பின்னர் விஜய்சேதுபதி இந்த பிரச்சனையில் தலையிட்டதால் பிரச்சனைகள் சுமூகமாக முடிந்து 8 மணி காட்சியில் இருந்து படம் ரிலீஸாகியது.
இந்த நிலையில் நேற்று சென்னையில் '96' படக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் நந்தகோபால், இயக்குநர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது: '96' ரிலீஸ் அன்று ஏற்பட்ட பிரச்சனை குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியும். இதில் யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த பிரச்சனை பல ஆண்டுகளாக உள்ளது. ஒரு வட்டத்திற்கு எப்படி தொடக்கமும் முடிவும் இல்லையோ, அதேபோல் இந்த பிரச்சனையை தொடங்கியவர் யார்? முடித்தவர் யார்? என்பது தெரியாது. யாரும் இதற்கு பொறுப்பும் அல்ல.
'96' ரிலீசுக்கு முந்தைய நாள் தயாரிப்பாளர் நந்தகோபால் பட்ட கஷ்டத்தை நான் நேரில் பார்த்தேன். அதனால் நான் வேறு வழியில்லாமல் உதவி செய்தேன். என் வாழ்க்கையில் இதுமாதிரியான விஷயங்களை பலமுறை கடந்து வந்துள்ளேன். அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டியவர்கள் இதுமாதிரியான பிரச்சனைகளை சந்திக்க வேண்டும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இதுமாதிரியான பிரச்சனை எனக்கோ அல்லது என்னுடைய டீமுக்கோ முதன்முதலில் நடப்பது அல்ல, சினிமாவில் இது காலங்காலமாஅக நடந்து வருகிறது' என்று விஜய்சேதுபதி கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout