இது காலங்காலமாக நடக்கும் பிரச்சனை: '96' பிரச்சனை குறித்து விஜய்சேதுபதி

  • IndiaGlitz, [Sunday,October 07 2018]

சமீபத்தில் வெளியான விஜய்சேதுபதியின் '96' திரைப்படம் ஒருசில பைனான்ஸ் பிரச்சனையால் அதிகாலை காட்சி ரத்தானது. அதன்பின்னர் விஜய்சேதுபதி இந்த பிரச்சனையில் தலையிட்டதால் பிரச்சனைகள் சுமூகமாக முடிந்து 8 மணி காட்சியில் இருந்து படம் ரிலீஸாகியது.

இந்த நிலையில் நேற்று சென்னையில் '96' படக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் நந்தகோபால், இயக்குநர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது: '96' ரிலீஸ் அன்று ஏற்பட்ட பிரச்சனை குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியும். இதில் யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த பிரச்சனை பல ஆண்டுகளாக உள்ளது. ஒரு வட்டத்திற்கு எப்படி தொடக்கமும் முடிவும் இல்லையோ, அதேபோல் இந்த பிரச்சனையை தொடங்கியவர் யார்? முடித்தவர் யார்? என்பது தெரியாது. யாரும் இதற்கு பொறுப்பும் அல்ல.

'96' ரிலீசுக்கு முந்தைய நாள் தயாரிப்பாளர் நந்தகோபால் பட்ட கஷ்டத்தை நான் நேரில் பார்த்தேன். அதனால் நான் வேறு வழியில்லாமல் உதவி செய்தேன். என் வாழ்க்கையில் இதுமாதிரியான விஷயங்களை பலமுறை கடந்து வந்துள்ளேன். அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டியவர்கள் இதுமாதிரியான பிரச்சனைகளை சந்திக்க வேண்டும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இதுமாதிரியான பிரச்சனை எனக்கோ அல்லது என்னுடைய டீமுக்கோ முதன்முதலில் நடப்பது அல்ல, சினிமாவில் இது காலங்காலமாஅக நடந்து வருகிறது' என்று விஜய்சேதுபதி கூறினார்.

More News

சூர்யா படத்தில் பிரதமராக நடிக்கும் பிரபல நடிகர்?

சூர்யா நடிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் பிரதமராக ஒரு பிரபல நடிகர் நடித்திருக்கும் செய்திவெளிவந்துள்ளது.

ரஜினி பாடலுக்கு நடனமாடும் நித்யானந்தா சிஷ்யைகள்

நித்தியானந்தா குறித்த சர்ச்சைக்குரிய செய்திகள் வெளியாகி வருவது தெரிந்ததே. சமீபத்தில் கூட ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளை தமிழில் பேச வைக்கும் சாப்ட்வேர் கண்டுபிடித்திருப்பதாக நித்யானந்தா கூறினார்.

விஜய்சேதுபதியின் 'சூப்பர் டீலக்ஸ்' ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு

'செக்க சிவந்த வானம்' , '96' என அடுத்தடுத்த விஜய்சேதுபதியின் படங்கள் வெற்றி பெற்று வருவது அவருக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ளது.

காலையில் நீதிபதி, மாலையில் மனைவி: ஒரே நாளில் தற்கொலை செய்து கொண்ட தம்பதிகள்

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் ஒரே நாளில் ஓய்வு பெற்ற நீதிபதியும் அவரது மனைவியும் ரயில் முன் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குரங்குக்கு டிரைவிங் கற்றுக்கொடுத்த டிரைவர் சஸ்பெண்ட்

ஒரு பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் உயிர்கள் அந்த பேருந்தின் டிரைவர் கையில்தான் இருக்கும். அந்த பொருப்பை உணர்ந்து டிரைவர்கள் தனது பணியை செய்ய வேண்டும்