ஞாயிற்றுக்கிழமையிலும் நடைபெறும் விஜய்சேதுபதி படப்பிடிப்பு: ராதிகா தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தரராஜன் இயக்கி வரும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் டாப்சி நடிக்கிறார் என்பதும் இந்த திரைப்படத்தின் சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விஜய்சேதுபதி, டாப்ஸி சம்பந்தமான காட்சிகள் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருவதாக செய்திகள் வெளியானது.
இந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கூட இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருவதாக இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் ராதிகா சரத்குமார் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விஜய் சேதுபதி மற்றும் பட குழுவினருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, டாப்ஸி, சுப்புபஞ்சு, தேவதர்ஷினி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
We work on sundays too @VijaySethuOffl @subbu6panchu pic.twitter.com/dKm84y0RHy
— Radikaa Sarathkumar (@realradikaa) September 13, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com