விஜய்சேதுபதியின் ஜல்லிக்கட்டுக்கு குறிக்கப்பட்ட நாள்

  • IndiaGlitz, [Tuesday,September 12 2017]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த 'கவண்', 'விக்ரம் வேதா' மற்றும் 'புரியாத புதிர்' ஆகிய மூன்று படங்கள் ஏற்கனவே இந்த ஆண்டு வெளிவந்துவிட்டது. இவற்றில் கவண் மற்றும் விக்ரம் வேதா சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்த நிலையில் விஜய்சேதுபதியின் அடுத்த படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜல்லிக்கட்டை மையமாக வைத்து விஜய்சேதுபதி நடிப்பில் பன்னீர்செல்வம் இயக்கி வந்த 'கருப்பன்' திரைப்படம் செப்டம்பர் 29ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த படத்தை சென்சார் அதிகாரிகள் பார்த்து படத்திற்கு பாராட்டு தெரிவித்ததோடு 'யூ' சான்றிதழ் அளித்துள்ளனர். சென்சார் சான்றிதழ் கிடைத்ததை அடுத்து ரிலீஸ் தேதியும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விஜய்சேதுபதி, தான்யா, பாபிசிம்ஹா, கிஷோர், பசுபதி, லிங்கா, சிங்கம்புலி, ரேணுகா, காவேரி, உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். ஏ.எம். ரத்னம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சக்திவேல் ஒளிப்பதிவும், வி.டி.விஜயன் படத்தொகுப்பு பணிகளும் செய்துள்ளனர். சமீபத்தில் மாணவர்களால் புரட்சி ஏற்படுத்தப்பட்ட ஜல்லிக்கட்டு குறித்த கதையம்சம் கொடதால் விஜய்சேதுபதியின் வெற்றிப்பட வரிசையில் இந்த படமும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

பாரதியின் புரட்சி விதை இனியேனும் விதி செய்யுமா? கமல்ஹாசன்

மகாகவி பாரதியாரின் 96வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில் பாரதியாரின் தீவிர ரசிகரான உலக நாயகன் கமல், பாரதியை குறிப்பிட்டு தனது டுவிட்டரில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

விவேக்கை உணர்ச்சிவசப்பட செய்த விஜய்யின் அக்கறை

கடந்த சில நாட்களாக அனிதாவின் மரணம் சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் இருந்த நிலையில் இன்று காலை முதல் லேசாக அந்த செய்தி மங்கியது போல் தெரிந்தது.

'விவேகம்' படத்தின் 15 நாள் வெற்றி வசூல் விபரங்கள்

தல அஜித் நடித்த 'விவேகம்' திரைப்படத்திற்கு ரிலீஸ் தேதியில் இருந்தே நாலாபக்கத்திலும் இருந்து நெகட்டிவ் ரிசல்ட்டுக்கள் குவிந்தன.

ஜிமிக்கி கம்மல் டான்ஸ் ஷெரிலுக்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா?

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் அஜித், விஜய், ஓவியா டிரெண்டுகளுக்கு இணையாக டிரெண்ட் ஆன ஒரு விஷயம் ஜிம்மி கம்மல் வீடியோ.

சூர்யா- ஜோதிகா: ஜில்லுன்னு ஒரு காதல்

கோலிவுட் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளுக்கு பஞ்சமில்லை.