சூர்யாவுக்கு விஜய் சேதுபதியிடம் இருந்து கிடைத்த 'சிறப்பான' ஆதரவு

  • IndiaGlitz, [Wednesday,April 29 2020]

சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை பேசியதாக வதந்தி பரப்பப்பட்டது. கோவில்களுக்கு செலவு செய்வது போல் மருத்துவமனைகளுக்கும் பள்ளிகளுக்கும் செலவு செய்யுங்கள் என்று ஜோதிகா கூறியதை பலர் திரித்து அவரை கடுமையாக கண்டனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

நெட்டிசன்களின் இந்த விமர்சனங்களுக்கு பதிலடியாக திரையுலகைச் சேர்ந்த பலர் கருத்து தெரிவித்த நிலையில் நேற்று நடிகர் சூர்யாவும் தனது தரப்பில் விளக்கம் அளித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஜோதிகா தவறாக எதுவும் பேசவில்லை என்றும் திருமூலர் உள்ளிட்ட பல பெரியவர்கள் பேசியதைத்தான் அவர் பேசியுள்ளார் என்றும் எனவே அவர் பேசிய கருத்திலிருந்து தாங்கள் பின்வாங்கப் போவதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சூர்யாவின் இந்த அறிக்கைக்கு ஊடகங்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் ஆதரவும் பாராட்டுக்களும் தெரிவித்துவரும் நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் ’சிறப்பு’ என்று கூறிய சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளார். விஜய்சேதுபதியின் இந்த ஆதரவு கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது