30 வருட போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்த விஜய்சேதுபதி!

  • IndiaGlitz, [Thursday,June 11 2020]

30 வருட போராட்டத்திற்கு நடிகர் விஜய்சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் ஆதரவு தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் கடந்த சில ஆண்டுகளாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். உச்சநீதிமன்றமே 7 பேரை விடுதலை செய்யும் முடிவை மத்திய மாநில அரசுகள் எடுக்கலாம் என்று கூறியும் இதுகுறித்த முடிவு எடுக்கப்படாமல் உள்ளது.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 30 ஆண்டுகளாக சிறையிலிருக்கும் ஏழு பேரில் ஒருவரான பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் என்பவர் கடந்த பல ஆண்டுகளாக தனது மகனின் விடுதலைக்காக போராட்டம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்றுடன் பேரறிவாளன் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகள் ஆனதை அடுத்து சமூக வலைதளத்தில் பேரறிவாளன் மற்றும் அற்புதம்மாள் ஆதரவாளர்கள் புதிய ஹேஷ்டேக் ஒன்றை தொடங்கி அதனை டிரெண்டு செய்து வருகின்றனர்.

அந்த ஹேஷ்டேக்கை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து பேரறிவாளன் விடுதலைக்கு தனது ஆதரவை அளித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

More News

பிஸ்கட் என நினைத்து ஜெலட்டின் குச்சியை கடித்த 6 வயது குழந்தை!!! அலட்சியத்தால் நடந்த வீபரீதம்!!!

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே 6 வயது குழந்தை ஒன்று பிஸ்கட் என நினைத்து ஜெலட்டின் குச்சியை வாயில் வைத்து கடித்து இருக்கிறது

சென்னையில் ஊரடங்கை தீவிரப்படுத்தும் திட்டமா? சென்னை ஐகோர்ட் கேள்வி

சென்னையில கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதை அடுத்து சென்னையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

இன்று ஒரே நாளில் டாக்டர் உள்பட 10 பேர் பலி: சென்னையில் கொரோனாவின் கோரம்

சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதில் ஒருவர் டாக்டர் என்றும் வெளி வந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஜூன் 22ல் பிறந்த நாள்: ரசிகர்களுக்கு விஜய் முக்கிய வேண்டுகோள்

ஒவ்வொரு ஆண்டும் தளபதி விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதியன்று, அவரது ரசிகர்கள் சிறப்பான வகையில் கொண்டாடி வருவது தெரிந்ததே.

தமிழக ஊர்ப்பெயர்கள்: தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கும் தமிழக அரசின் புதிய அரசாணை!!!

தமிழகத்தின் ஊர்ப்பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப ஆங்கிலத்தில் எழுதப்பட வேண்டும் என்று காலம் காலமாக முயற்சி செய்து வருகிறோம்.