'மகாராஜா' வெற்றி எதிரொலி.. 400 தியேட்டரில் ரீ ரிலீஸ் ஆன விஜய் சேதுபதி படம்..!

  • IndiaGlitz, [Saturday,August 10 2024]

விஜய் சேதுபதி நடித்த 50வது திரைப்படமான ’மகாராஜா’ சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்தது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அவருடைய சூப்பர் ஹிட் படம் ஒன்று ரீரிலீஸ் ஆகியுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவான ’சூப்பர் டீலக்ஸ்’ என்ற திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் நேற்று ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 400 திரையரங்குகளில் வெளியாகி உள்ளன.

தெலுங்கில் இந்த வாரம் பெரிய திரைப்படங்கள் எதுவும் வெளியாகாததால் இந்த படத்தின் ரீரிலீஸ்-க்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது. விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி ஆகியோர் தெலுங்கு திரை உலக ரசிகர்களுக்கும் பிரபலமானவர்கள் என்பதால் தற்போது இந்த படம் ரீரிலிசிலும் நல்ல வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தமிழிலும் விரைவில் இந்த படம் விரைவில் ரீரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

More News

விஜே சித்ரா வழக்கில் கைது செய்யப்பட்ட கணவர்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த விஜே சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த அவரது கணவர் உள்பட ஏழு பேரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உங்கள் ராசிக்கு கடவுள் எழுதிய விதி இதுதான்!

பிரபல ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில் 12 ராசிகளுக்கான தலைவிதியை வெளிப்படுத்தியுள்ளார்.

உண்மையிலேயே நல்ல செய்தி சொன்ன இந்திரஜா.. ரோபோ சங்கர் குடும்பத்தினர் மகிழ்ச்சி..!

நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா திருமணம் கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த நிலையில் அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளதை அடுத்து ரோபோ சங்கர்

'கங்குவா' டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சூர்யா ரசிகர்கள் உற்சாகம்..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை

சீட் நுனியில் திகில் திரைக்கதை.. பிரசாந்த் சூப்பர் கம்பேக்.. பாசிட்டிவ் விமர்சனத்தில் 'அந்தகன்'..!

பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் உருவான 'அந்தகன்' திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில்